Showing posts with label பதிவர் வட்டம்/புதிர். Show all posts
Showing posts with label பதிவர் வட்டம்/புதிர். Show all posts

Saturday, August 29, 2009

547. ராஜாவின் இசை மேதைமை

இளையராஜாவின் இசை குறித்த கருத்துச்செறிவு மிக்க நுணுக்கமான அலசலை, பின்னூட்டங்களாக தமிழ் இணையத்தில் வாசிக்க நேர்ந்தது. அவை பலரும் வாசிக்க வேண்டியவை, சேமிக்கத்தக்கவை என்று கருதுவதால், அவ்விரு பின்னூட்டங்களை இடுகையாக என் வலைப்பதிவில் இடுகிறேன்! பதிவுலக நண்பர்களிடையே தனிமனித விருப்பு/வெறுப்பு சார்ந்த சச்சரவாக, விவாதம் மாறி விடாமல் இருக்க, அவ்விரு பின்னூட்டக் கருத்துகளை சற்றே மட்டுறுத்தி பதிய வேண்டியது அவசியமாகிறது! இனி வாசியுங்கள்....

இவை ரோசா வசந்த்தின் கருத்துகள்:

ரோஸாவசந்த் 10:19 am on August 28, 2009


http://rozavasanth.blogspot.com/2006/05/1.html

http://rozavasanth.blogspot.com/2006/06/2.html


இந்தி பாடல்களை கேட்டுகொண்டிருந்த தமிழர்களை தமிழ் பாடல்களை ராஜா கேட்க வைத்தார் என்று சொல்லும் வாதத்தை சில ஆதாரத்துடன் வன்மையாக மறுத்திருந்தேன். இந்தியில் இருந்து ராஜா தமிழை காப்பாற்றினார் என்பது போல எம்.எஸ்.வி போன்ற மேதைகளை கேவலப்படுத்தும் வாதம் வேறு கிடையாது. ராஜா என்று ஒருவர் பிறக்காமல் இருந்தால் கூட இந்திப்பாடல் ஆதிக்கத்திலிருந்து தமிழ் நிச்சயாமாய் தப்பியிருக்கும்,

அடுத்து ஹிந்திக்காரர்கள் எல்லாம் இப்போது தமிழ் பாட்டு கேட்டு கொண்டிருக்கிறார்களா? அப்படியே இருந்தாலும் இதெல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்லை. அடிப்படையில் அடிமை மனநிலையை கொண்டிருப்பவர்களுக்குதான் இந்திக்காரர்கள் இசையை அங்கீகரிப்பது என்பது ஒரு பொருட்டாக இருக்க முடியும். ராஜா தமிழ் திரை உலகில் ஒரு பொற்காலத்தை உருவாக்கியிருந்த போது, இந்தியில் பப்பிலஹரி கொடிகட்டி பறந்தார். ..... அளவுகோல் படி பப்பிலஹரி ஒரு மேதையாக தெரியலாம்.

நான் கட்டாயப்படுத்தி .. கருத்தை மாற்ற முடியாது. சுமார் 40 ஆண்டுகளாக மிக வளமாக இருந்த ஹிந்தி திரை இசை, 70களிலேயே அலுப்பூட்டும் மோனொடோனஸ் இசையாக மாறி, 80 களில் குப்பையாகி, 80களின் இறுதியில் கழிவாக மாறியிருந்தது. இவைகளை உதாரணத்துடன் விளக்க முடியும். அந்த சூழலில் கூட ராஜாவால் இந்தியில் தடம் பதிக்க முடியவில்லை என்றால் அந்த வெகுரசனை கேவலமானதா அல்லது அது ராஜவின் குறையா?

நான் ரஹ்மான், ராஜா உட்பட யாரையும் ஒப்பிடுவதில்லை. ராஜாவின் இசை மட்டும் போதுமான ஒன்றாக எனக்கும் சமூகத்திற்கும் இல்லை என்றுதான் நினைக்கிறேன். ஆனால் ஜீனியஸ் என்ற வார்த்தைக்குள் ராஜாவை மட்டுமே என்னால் அடக்க முடியும். ஓரளவு இசை அறிவு கொண்டு மற்றவர்கள் அளித்த இசை பரிணமித்ததை பாதையை ஒரு சட்டகத்தில் புரிந்து கொள்ள முடியும். ரோஜா, ஜெண்டில்மேன் துவங்கி ̀மஸக்கலி ‘பாடல்வரை அது எவ்வாறு ஏற்கனவே இருந்த இசைகளை மிக திறமையான முறையில், நீண்ட உழைப்பிற்கு பின் manipulate செய்து உருவானது என்று புரிந்து கொள்ளமுடிகிறது. ராஜா அளித்தவைகள் இத்தகைய எந்த புரிதலுக்கும் அப்பாற்பட்டு இருப்பதாலேயே அவரை மட்டுமே நானும் பலரும் ஜீனியஸ் என்கிறோம். இதில் மாறுபடுவர்களுடன் சண்டை போடுவதில் எந்த அர்த்தமும் இல்லை - ஓரமாக இதை சொல்லிவிட்டு போவதை தவிர.

ராஜா செய்த அனைத்தும் அதிசயம்! ̀செந்தூரப்பூவே’யில் துவங்கி (நான் அன்னக்கிளியில் ராஜாவை துவக்க மாட்டேன்) ̀தென்றல் வந்து தீண்டும் போது’ வரை அனைத்தும் நமது புரிதல்களுக்கு அப்பாற்பட்டது. இதுவரை நாம் அறிந்த genreக்களில் அடங்காமல், அவைகளின் fusion என்றும் வகைப்படுத்த முடியாத ஒன்று. ராஜாவின் காலத்தில் இந்த அதிசயத்தை உணர்ந்தததாக சொல்ல முடியாது. அப்போது அது ஒரு ஹிட் இசை என்ற அளவில் மட்டுமே இருந்தது. 20 ஆண்டுகள் கழித்தே இதன் பல அறியாத நுட்பங்களை பேசிக்கொண்டிருக்கிறோம். இன்னமும் பிடிபட்டதாக சொல்ல முடியவில்லை. அதிசயிக்க மட்டுமே முடிகிறது.

ராஜாவையும் ரஹ்மானையும் ஒப்பிடுவது என்பது மிகவும் அபத்தம். நான் ஒரு அறிவுத்துறையில் ஆராய்ச்சி செய்யவேண்டும் என்றால் இதற்கு முன்னால் பங்களித்தவர்களை தாண்டித்தான் ஏதாவது செய்யவேண்டும். அவ்வாறு தாண்டி செய்துவிட்டதால் ஐன்ஸ்டீனை விட நான் பெரிய ஆளாகிவிட முடியாது. அந்த வகையில் ரஹ்மான் ராஜாவை தாண்டி சென்றவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இதை வேறு விதமாக பார்க்கலாம். (இதுவும் நேரடி ஒப்பிடல் இல்லை.)

76 இல் இருந்து 92 வரை ராஜா, 92 இல் இருந்து 2008 வரை ரஹ்மான். இந்த 16 வருடங்களை ஒப்பிடுங்கள். புகழின் உச்சத்தில் இருந்தும் ரஹ்மான் இன்னும் 100 படங்களுக்கு கூட இசையமைக்கவில்லை. ராஜாவோ சுமார் 800 படங்கள், எல்லா படங்களிலும் இன்னும் 100 ஆண்டுகளுக்கு நாம் அலசவேண்டிய நுட்பம் கொண்ட பிண்ணணி இசை. அந்த கணத்தில் நிகழ்ந்த அதிசயம் போல பாடல்கள். இவை அத்தனையும் ராஜா என்ற தனி மனிதன் முழுமையாக எழுதிக்கொடுத்தது. ரஹ்மானைப்போல விக்கி விநாயக்ராமின் பையனை(பெயர் மறந்து விட்டது) பல வகை தாளங்களை தனித்தனியே போடச்சொல்லி, பதிவு செய்து, அவைகளின் பல கலவைகளை இரவு முழுக்க ஆராய்ந்து ̀அழகான ராட்சசி’யின் தாளமாக தருவது அல்ல. ரஹ்மான் செய்வது மீது எனக்கு எந்த விமர்சனமில்லை. ஆனால் அது நாம் புரிந்து கொள்ளும் சட்டகத்தில் அடக்கும் மிக திறமை + உழைப்புக்கு பின் விளையும் இசை. ராஜா, பலர் கவனித்திருக்க வாய்ப்பு குறைவாக உள்ள, ̀பகவதிபுரம் ரயில்வே கேட்’ என்ற படத்தில் ̀செவ்வரளி தோட்டத்திலே’ அளித்தது இந்த புரிதல்களுக்கு அப்பாற்பட்ட அதிசயம்.

இருந்தாலும் ராஜாவை சினிமாவிற்கு பொருத்தமானவராக இல்லை என்றுதான் என் பதிவில் கருத்து கூறியிருக்கிறேன். இதை இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதியிருக்கிறேன். “சினிமாப் பாடலிசையின் தேவைகளை மிக பொருத்தமாய் (ஒரு விஸ்வநாதனைப் போல, ரஹ்மானைப் போல) அவராய் திருப்தி செய்ய இயலவில்லை என்றும் தோன்றுகிறது” என்பதுதான் என் கருத்து.

இந்த வகையில் ராஜா குறித்தும் மற்றவர்கள் குறித்தும் பேசவும், உரையாடவும் நிறைய உள்ளது. (20 ஆண்டுகளாய் குப்பைகளை உற்பத்தி செய்த) ஹிந்தியில் வெற்றி பெற முடியவில்லை, வெள்ளைக்கார சினிமாக்காரன் ரஹ்மானை கூப்பிட்டான் ராஜாவை கூப்பிடவில்லை என்கிற வாதங்களை முன்வைத்து அல்ல. (உண்மையில் பல மேற்கின் இசை அறிஞர்கள் ராஜாவைத்தான் கொண்டாடுகிறார்கள், ரஹ்மானை அல்ல என்பதுதான் உண்மை. ஆதாரத்துடன் மேற்கோளுடன் சொல்ல முடியும்).

மற்றபடி ....கேள்வி கேட்டு பதில் சொல்லி விவாதிக்கும் விஷயம் இதுவல்ல. ....கருத்துக்களை மாற்றும் நோக்கமும் எனக்கில்லை. ராஜா மீதான் வெறுப்பு என்று காரணம் இல்லாம் பரவிகொண்டிருக்கும் அலையில் .... விழக்கூடாது

நன்றி!
***********************************************
இவை Kaargi Pages அவர்களின் கருத்துகள்:


முதலில் இந்தியில் இசை அமைப்பது இந்தியப் புகழ் பெற்றுவிட்டதற்கான ஒரு பென்ச்மார்க் என்பது போலவும். ஹாலிவுட்டில் இசையமைப்பது உலகப் புகழுக்கான பென்ச்மார்க் போலவும் <கூறுவது தவறு>

ரஹ்மான் ஒரு திறமைசாலி என்பதை மறுக்கவில்லை. ஆனால் அவர் இளையராஜாவை தாண்டிச் சென்றாரா? அப்படி அவர் இளையராஜாவைத் தாண்டிவிட்டார் என்று .... சொல்வதானால் அவர் இளையராஜாவால் கையாள முடியாத எந்த வகை இசை வடிவத்தை உருவாக்கினார் என்பதை .... விளக்க வேண்டும்.

அதே நேரம் இளையராஜாவோ தனக்கு முன் இருந்த எல்லா திரைஇசை அமைப்பு முறைகளையும் மரபுகளையும் வடிவங்களையும் (மோனோடோன்) உடைத்து இசையை ஒரு பலவண்ணக் கலவையாக பாமரனுக்குக் காட்டினார். நாட்டுப்புற மெட்டு கருநாடக மெட்டாக உருமாறுவதாகட்டும்.. தமிழக நாட்டுப்புற இசையும் கருநாடக இசையும் மேற்கத்திய செவ்வியல் இசையும், ஜாஸ் ராக் போன்ற மேற்கத்திய இசை வடிவங்களும் ஒன்றன் மேல் ஒன்றாக - ஒன்றில் ஒன்று கலந்து - ஒன்றை ஒன்று தொடர்வது போல் - ஒன்று இன்னொன்றாக உருமாறுவது போல - ஒன்றின் வடிவத்தில் இன்னொன்றின் உள்ளடக்கம் கொண்டு - இப்படி அவர் செய்யாத பரிசோதனை முயற்சிகள் இல்லை. அவரின் ஒவ்வொரு பரிசோதனை முயற்சியும் இன்று வரையில் ஒரு ரீங்காரமாய் நம்மை விட்டு அகலாமல் சுற்றிச் சுற்றி வந்து கொண்டே இருக்கிறது..

இந்த மறுமொழியை டைப் அடிக்கும் போதே கணினியில் இளையராஜாவின் இசையில் போன மாதம் வெளியான ஒரு கன்னட பாடலான "ஹொடதவனே" ஓடிக் கொண்டிருக்கிறது ( http://www.youtube.com/watch?v=RHSpqVaud80 ) இந்த மனிதருக்கு 67 வயதாகி விட்டது என்பதை அவரைக் கண்டிராத ஒருவர் இந்தப் பாடலைக் கேட்டால் ஒப்புக் கொள்ளவே மாட்டார். ஒரு 'குத்து' பாட்டிற்குள் ஆங்காங்கே மெல்லியதான ஒரு மெலடி - இப்போதைய "குத்தர்களின்" ( ஏ.ஆர், ஹாரிஸ், யுவன், தொடங்கி இமான் வரையிலான) பாணியை கேலி செய்யும் ஒரு ஆர்கெஸ்ட்ரேஷன்.. அந்த ரிதம்... ஓ...

ஏ.ஆர் ரஹ்மான் சில குறிப்பிடத்தகுந்த பாடல்களைக் கொடுத்திருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை. அவரின் தளம் வேறு. அவர் இன்றைய உலகமயமாக்கல் யுகத்தின் பிரதிநிதி. இளையராஜாவோ எழுபதுகளில் கொந்தளித்துக் கொண்டிருந்த ஒரு உலகத்தை பிரதிபலித்தவர் - கட்டுமீறத் துடித்த இளைஞர்களின் - ஒரு வெடித்துக் கிளம்பிய ஒரு குரல். அன்னக்கிளியின் டைட்டில் பி.ஜி.எம்மில் பீறிட்ட அந்த வயலின்.. எண்பதுகளில் அவரின் இசையில் பிரதான இடத்தைப் பிடித்திருந்த அந்த மெட்டாலிக் ஸ்ட்ரிங் கிடார்கள்.. அவரது பாடல்களில் இடம்பெற்ற ஒவ்வொரு இண்டர்லூட்களிலும்(இடைஇசை) ப்ரீலூட்களிலும் (துவக்க இசை) நமது நரம்புகளைப் பிடித்து இழுத்த அந்த தந்திக் கம்பிகள்.. அவர் அன்றைய தனது சூழலைப் பிரதிபலித்தார்.. அந்த காலகட்டத்தின் இளையராஜாவின் இசை விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டியது

இன்றைய மாறிப்போன சமூக சூழல் பாஸ்ட் புட் கேட்கிறது. ரஹ்மான் சிறப்பான பீஸ்ஸா தயாரிப்பாளர்.. அவர் தனது சூழல் எதைக் கேட்கிறதோ அதை விற்கிறார்.. இளையராஜாவோ தனது படைப்பின் வடிவத்தை சூழலின் டிமாண்டிற்கும் உள்ளடக்கத்தை தனது ஒரிஜினாலிட்டியுடனும் கொடுக்க முடியுமா என்று பரிசோதித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்... கடந்த ஒரு பத்தாண்டுகளாக அந்தப் பரிசோதனையின் சில வெளிப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டது ( சில உதாரணங்கள் - ஹேராம், விருமாண்டி, சிறைச்சாலை, ஆதினகலூ(கன்னடம்), நான் கடவுள், ப்ரேம் கஹானியின்(கன்னட) பாடல்கள், வால்மீகி,) சில ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அவர் தனது காலம் முழுவதும் பரிசோதனைகள் செய்து கொண்டிருப்பார்.. அந்தப் பரிசோதனைகள் எதிர்காலத்தில் இசை ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு ஒரு புதையலாக காத்திருக்கும்.

நாளை சந்தையில் வாடிக்கையாளர்கள் பர்கர் வேண்டும் என்று கேட்டால் ரஹ்மான் சிறப்பான பர்கர்களை விற்கத்துவங்குவார் - அவர் ஒரு நல்ல திறமையான வியாபாரி. பர்கரோ பீஸாவோ ஒரு ஏழு மணி நேரம் போனால் கழிந்து போகும்.

எ.அ.பாலா

நன்றி: ரோஸாவசந்த் & Kaargi Pages

Sunday, January 11, 2009

506. சத்யம் மோசடியால் ஆந்திர அரசியல்வாதிகளுக்கு சிக்கல்!

சத்யம் மோசடியால் ஆந்திர அரசியல்வாதிகளுக்கு சிக்கல்! :

வெளிச்சத்துக்கு வருகிறது அடுத்தடுத்து மெகா ஊழல்கள்

ஐதராபாத் : சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் மோசடியால், ஆந்திர அரசியல்வாதிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நடந்துள்ள சில மெகா ஊழல்கள் வெளிச்சத்துக்கு வரத் துவங்கியுள்ளன. நாடு முழுவதும், தற்போது சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தைப் பற்றித் தான் பரபரப்பாகப் பேசப்படுகிறது. அந்நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜூ 8,000 கோடி ரூபாய் அளவுக்கு மெகா மோசடி செய்ததும், அதை அவரே ஒப்புக் கொண்டதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்துக்கு உள்ள அரசியல் தொடர்புகள் குறித்தும் பலமான பேச்சு எழுந்துள்ளது. இந்த பிரச்னையில் ஆந்திர அரசியல்வாதிகளுக்கு தலைவலி ஆரம்பமாகியுள்ளது.

ஆந்திர அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி நடக்கும் போது, சத்யம் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜூ, அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். தகவல் தொழில் நுட்பத் துறையில் ராமலிங்க ராஜூ தான் அதிக புகழ் பெற்றவர், சாதனையாளர் என, ஆந்திரா முழுவதும் அப்போது பெரும் பிரசாரமே செய்யப்பட்டது. சந்திரபாபு நாயுடு ஆட்சிக் காலத்தில், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் ஆந்திராவில் கொடி கட்டிப் பறந்தது. கடந்த 2004ல், ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியேற்றது. சந்திரபாபுவுக்கு ஆதரவான நிறுவனம் என்பதால், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்துக்கு நெருக்கடி தரப்படும் என எல்லாரும் எதிர்பார்த்தனர். ஆனால், ராஜசேகர ரெட்டியுடனும் நெருங்கினார் ராமலிங்க ராஜூ. சத்யம் குழுமத்தைச் சேர்ந்த மைடாஸ் என்ற கட்டுமான நிறுவனத்துக்கு மாநில அரசு முக்கியத்துவம் தரத் துவங்கியது. மாநில அரசின் மிகப் பெரிய கட்டுமானத் திட்டங்களுக்கான பெரும்பாலான ஒப்பந்தங்கள், மைடாஸ் நிறுவனத்துக்கே தரப்பட்டன.

பொதுவாக, வளர்ச்சிப் பணிகள் நடப்பதற்கு லஞ்சமே மிகப் பெரிய தடையாக இருக்கும். ஆனால், ஆந்திராவைப் பொறுத்தவரை, லஞ்சத்தை மறைப்பதற்காக வளர்ச்சிப் பணிகள் நடந்தன. பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான "ஜலாயங்னம்' என்ற நீர்ப்பாசனத் திட்டம், 1,200 கோடி ரூபாய் மதிப்பிலான மசூலிப்பட்டினம் துறைமுக மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றுக்கான ஒப்பந்தங்கள் மைடாஸ் நிறுவனத்துக்கு தரப்பட்டன. இதில், துறைமுகத்துக்காக மாற்று இடத்தைக் கையகப்படுத்துவதற்காக, மைடாஸ் நிறுவனத்துக்கு மாநில அரசு சார்பில் ரொக்கமாக 300 கோடி ரூபாய் இழப்பீடாக அளிக்கப்பட்டது, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இதேபோல், 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஐதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்திலும் சர்ச்சை எழுந்தது. அரசியல் ஆதாயத்துக்காக இந்த ஒப்பந்தம் மைடாஸ் நிறுவனத்துக்கு தரப்பட்டதாக சந்தேகம் எழுப்பப் பட்டது. இதுகுறித்து, டில்லி மெட்ரோ ரயில் திட்ட தலைவர் ஸ்ரீதரன் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளார். மேலும், ஒரு முக்கியமான ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக, மூத்த அரசியல் தலைவர் ஒருவரின் மகனுக்கு 200 ஏக்கர் நிலத்தை தருவதாகவும் மைடாஸ் நிறுவனம் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும், இதுகுறித்த தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை. அதேபோல், சத்யம் நிறுவனத்தால் துவங்கப்பட்ட எமர்ஜென்சி ஆம்புலன்ஸ் திட்டம் தொடர்பாகவும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இது போன்ற பல மெகா ஊழல்கள் வெளிச்சத்துக்கு வரத் துவங்கியுள்ளதால், சந்திரபாபு நாயுடு, ராஜசேகர ரெட்டி போன்ற ஆந்திர அரசியல்வாதிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஆந்திர அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி: தினமலர்

எ.அ.பாலா டெயில் பீஸ்:

இப்படி அரசியல்வாதிகள் பற்றி இவ்வளவு ஊழல் தொடர்பான புகார்கள் வந்திருப்பதைப் பார்த்தால், அரசு தலையீட்டால் (அரசு சத்யம் போர்டுக்கு தானே ஆட்களை நியமிக்க இருக்கிறது!) சத்யம் மொத்தமா உருப்படாம போய் விடும் போலத் தெரிகிறது. .டி. துறையில் தான் அரசியல் தலையீடும் அரசியல்வாதிகளின் லஞ்ச லாவண்யமும் அவ்வளவு இல்லாமல் இருந்தது. இனிமேல், அது காலின்னு நினைக்கிறேன். சத்யம் பிரச்சினையை சாக்காக காட்டி, .டி துறை கம்பெனிகள் அலைக்கழிக்கப்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே, உலகெங்கும் பொருளாதார நெருக்கடி வேறு. ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் "கோவிந்தா கோவிந்தா" தான் !!!

பாவம் சத்யம் கம்பெனியில் வேலை பார்க்கும் மக்களை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது. மற்ற ஐ.டி கம்பெனிகள் (புனிதப்பசு போல் இன்ஃபோசிஸ் முன்னாள் சேர்மன் நாராயணமூர்த்தி தன் கம்பெனி சத்யம் ஆட்களை வேலைக்கு எடுக்காது என்று திருவாய் மலர்ந்துள்ளார்!) அவர்களை இப்போதிருக்கும் சூழலில் வேலைக்கு எடுக்கத் தயங்குவார்கள். சத்யம் கம்பெனிக்கு வேண்டிய நிவாரணத் தொகையை சிலபல வங்கிகள் வாயிலாக வழங்குமாறு அரசு செய்து விட்டு, திறமையான நேர்மையான ஆட்கள் சத்யமை நடத்திச் செல்ல வழிவகை செய்யப்பட்டாலொழிய, சத்யம் உருப்பட (லெம்மன் பிரதர்ஸ் கதி தான் ஏற்படும்!) சான்ஸே கிடையாது :-(

Thursday, December 25, 2008

OCT 2005 - தமிழ்மணமும்...

இது ஒரு மீள்பதிவு, 3 வருடங்களுக்கு முன் சொன்னவை எவையும் மாறவில்லை என்பதை நிரூபித்து வரும் தமிழ் வலையுலக வித்தகப் பதிவர்களுக்கு நன்றி, நன்றி, நன்றி !!! எனக்கும் தமிழ்மண நிர்வாகத்திற்கும் ஸ்நானப்ராப்தி கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது!
*************************************

Saturday, October 22, 2005

தமிழ்மணமும் ...

தமிழ்மணத்திலிருந்து தற்போது நீக்கப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளை விலக்கியது சரியானதா என்று பலர் தத்தம் கருத்துக்களை முன் வைத்துள்ளனர். சில கருத்துக்களை சக வலைப்பதிவருடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றியதன் விளைவே இப்பதிவு!

1. ஒருவர் தன் பதிவில் முன் வைக்கும் கருத்துக்களுக்கு, சிலருக்கோ / பலருக்கோ மாற்றுக் கருத்துக்கள் இருக்கும். அவற்றை, நாகரீகமான வகையில், சம்மந்தப்பட்ட பதிவின் பின்னூட்டக் களத்திலோ அல்லது தனிப்பதிவாகவோ இட மற்றவருக்கு நிச்சயம் உரிமை உண்டு. ஆனால், ஒருவரைப் பற்றிய இரங்கல் பதிவையும், அதில் இடப்பட்ட பின்னூட்டங்களையும் பகடி செய்வது சரியான செயலாகத் தோன்றவில்லை. மதி தமிழ்மணத்திற்கு செய்து வரும் சேவை மற்றும் அவரது எழுத்துக்களை முன் வைத்து அவருக்கென்று ஒரு வாசகர் வட்டம் உள்ளது. அதனால் அவரது பதிவுகள் அதிக அளவில் வாசிக்கப்பட்டும், பின்னூட்டங்கள் பெற்றும் வருகின்றன. இதில் பகடி செய்வதற்கு என்ன இருக்கிறது என்று விளங்கவில்லை!

2. சில சமயங்களில், பகடியை மாற்றுக் கருத்துக்களை வெளியிட ஒரு ஆரோக்கியமான வழியாகப் பயன்படுத்துவதில் தவறில்லை. அதைப் பலரும் ரசிக்கவே செய்கின்றனர். அதே நேரத்தில், வலைப்பதிவுக் களத்தை பிறரை பகடி செய்வதற்கு மட்டுமே பயன்படுத்துவது, பல நேரங்களில் காழ்ப்பை வளர்ப்பதற்கு மட்டுமே அடி கோலுவதாய் அமைந்து விடுகிறது.

3. காசி தமிழ்மணச் சேவையின் முதலாண்டு நிறைவின் போது இட்ட பதிவிலேயே மதத்துவேஷம் மற்றும் இன்னபிற விரும்பத்தகாத விடயங்களைத் தாங்கி வரும் பதிவுகளை விலக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகக் கூறியிருந்தார். அந்த நிலைக்குத் தன்னை தள்ள வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனால், தொடர்ந்து அவ்வாறே எழுதி வருபவர்கள் தங்கள் பதிவுகள் தமிழ்மணத்திலிருந்து விலக்கப்படக் கூடிய சாத்தியம் இருந்ததை உணர்ந்திருக்க வேண்டும்.

4. பலருக்கு, பணி, குடும்பம் ஆகியவற்றுக்கே நேரம் போதாமல் இருக்கும் சூழலில், தனியொரு மனிதனாக, தமிழ் வலைப்பதிவுகளை ஒருங்கிணைக்க தமிழ்மணத்தை உருவாக்கிய காசியின் சேவை மனப்பாங்கையும், உழைப்பையும் மனதில் கொண்டாவது, இம்மாதிரி பொதுவில் அவருக்கு கசையடிகள் வழங்குவதை தவிர்க்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து! "நாங்கள் என்ன, தமிழ்மணத்தை உருவாக்க பொருளுதவி கேட்டிருந்தால் தந்திருக்க மாட்டோமா?" என்று வினாவெழுப்புவது சற்றும் சரியல்ல! பொருளுதவி கொடுத்தாலும், ஒருவர் அதில் முனைய வேண்டாமா ?

5. தமிழ்மணத்திலிருந்து விலக்கப்பட்ட வலைப்பதிவுகளுக்குச் சொந்தக்காரர்கள், விடயத்தை பொதுவில் வைப்பதற்கு முன், தனிப்பட்ட முறையில் காசியை அணுகி, காரணங்களைக் கேட்டு, சர்ச்சைக்குரிய பதிவுகளை தாமாகவே நீக்க முன் வந்திருந்தால், பிரச்சினையை சுமுகமான முடிவுக்கு எடுத்து வந்திருக்கக் கூடிய சாத்தியம் இருந்ததாகவேத் தோன்றுகிறது. ஒரு விதயத்தை ஊதிப் பெரிதாக்குவது என்பது இங்கு நடைமுறையாகவே இருந்து வருகிறது!

6. இதைத் தணிக்கை என்று எண்ணுவதை விட, சக வலைப்பதிவரின் மனம் புண்படும்படியும், தேவையற்ற சர்ச்சையை வளர்க்கும் வகையிலும் எழுதாமல் இருப்பதன் அவசியத்தை வலியுறுத்துவதாக நினைத்தால், அனைவருக்கும் நல்லது. முக்கியமாக, சின்னவன், இணையக்குசும்பன் பதிவுகள் நீக்கப்பட வேண்டிய சூழல் உருவானது குறித்து இங்கே யாருக்கும் மகிழ்ச்சி இல்லை!!! பதிவுகள் விலக்கப்பட வேண்டிய காரணங்களை ஆராயும் வழிவகைகள் குறித்து என் கருத்துக்களை முன் வைப்பதை, தற்போதைய சூழலில், தவிர்க்கிறேன்!

7. இறுதியாக, தமிழ்மணம் வாயிலாகத் தான், பல சாதாரணர்களின் (என்னையும் சேர்த்து) பதிவுகள் கவனிக்கப் படுகின்றன, வாசிக்கப் படுகின்றன என்பதை பலரும் ஒப்புக் கொள்வர். ஏன், தமிழ்மணம் மூலமாகத் தான் கௌசல்யா என்ற ஏழை மாணவியின் கல்விக்கு (சக வலைப்பதிவரின் ஆதரவோடு) உதவ வேண்டும் என்ற எங்கள் நோக்கத்தின் முதல் கட்டம் நிறைவேறியது!

என்றென்றும் அன்புடன்
பாலா

பதிவர் enRenRum-anbudan.BALA பதிந்த நேரம் 10/22/2005 04:04:00 PM
*********************************

இவ்விடுகைக்கு வந்த மறுமொழிகள்:

12 மறுமொழிகள்:

Dharumi said...
ஊதுற சங்கை ஊதுவோம்; காது இருப்பவன் கேட்கட்டும்.

4:30 PM, October 22, 2005

Anonymous said...
தங்களுடைய வலைப்பூ தினமலரில் இடம்பெற்றிருந்ததை பார்த்தீர்களா... அம்மு.

7:35 PM, October 22, 2005

enRenRum-anbudan.BALA said...
dharumi,
nanRi !

Anony,
Thanks! Pl. give the link in DINAMALAR that points to my BLOG.

9:46 PM, October 22, 2005

வலைஞன் said...
நன்றி

2:50 PM, October 23, 2005

மூர்த்தி said...
அன்பின் பாலா,

உங்கள் கருத்துகளோடு நான் ரொம்பவும் ஒத்துப் போகிறேன். ஆனால் நீக்குவதற்கு முன் அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்து இருக்கலாம். இது பலர் தாமாகவே திருந்திக் கொள்ள ஒரு வாய்ப்பினை வழங்கி இருக்கும் என்று நினைக்கிறேன்.

3:09 PM, October 24, 2005

ஜோ / Joe said...
பாலா,
உங்கள் கருத்துக்கள் நியாயமானவை.ஆதரிக்கிறேன்.

3:55 PM, October 24, 2005

enRenRum-anbudan.BALA said...
anurag, மூர்த்தி, ஜோ,

நன்றி !

12:49 PM, November 04, 2005

Kasi Arumugam - காசி said...
நன்றி, பாலா.

4:02 PM, December 06, 2007

லக்கிலுக் said...
This post has been removed by a blog administrator.
5:29 PM, December 06, 2007

Rajesh said...
காசி!
தெரியாமல் தான் கேட்கிறேன். 2005 அக்டோபரில் போடப்பட்ட பதிவுக்கு இப்போது ஏன் நன்றி? ...... Edited .......
(Rajesh)

8:29 PM, December 06, 2007

enRenRum-anbudan.BALA said...
ராஜேஷ்,

காசியை நீங்கள் கேள்வி கேளுங்கள், தப்பில்லை. அதே நேரம், சர்ச்சைக்குரிய (தனி மனித தாக்குதலாக இல்லாதபோதும்!) ஒரு வரியை நீக்கியதற்கு மன்னிக்கவும் !

எ.அ.பாலா

8:30 PM, December 06, 2007

Kasi Arumugam - காசி said...
//தெரியாமல் தான் கேட்கிறேன்.//
தெரியாட்டித்தான் கேக்கணும். தெரிஞ்சுட்டே கேட்டா அதுக்குப்பேர் வேற :-)

//இப்போது ஏன் நன்றி?//
அப்ப சொல்லலைன்னா எப்பவும் சொல்லக்கூடாதா? இப்ப சொன்னா என்ன தப்பு? இதையெல்லாம் ஒரு கேள்வின்னு கேக்கவந்துட்டீங்களே, பெரீவரே.

8:49 PM, December 06, 2007

Friday, December 12, 2008

486. தீவிரவாதம் சார்ந்த கேள்விகள் - டைம்ஸ் நாளிதழின் மக்கள் சர்வே

பாகிஸ்தான் அரசு மும்பைத் தாக்குதலுக்கு ஆதரவு அளித்ததா என்ற கேள்விக்கு, டைம்ஸ் சர்வேயில் 88% மக்கள் ஆம் என்று பதில் சொல்லியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

மற்ற சில கேள்விகளும், சர்வே முடிவுகளும்: ஒரு பார்வை

1. உள்நாட்டு பாதுகாப்பை ராணுவம் அல்லது ஒரு ஃபெடரல் அமைப்பு ஏற்க வேண்டுமா ?

ஆம் - 77 %

இல்லை - 18%

2. பாகிஸ்தானுடன் அனைத்து வகை உறவுகளையும் இந்தியா முறித்துக் கொள்ள வேண்டுமா ?

ஆம் - 73% (அதாவது கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கு பேர், இதே கருத்தை எனது சமீபத்திய பதிவு ஒன்றில் சொல்லியிருந்தேன்!)

இல்லை - 25%

3. இந்தியாவின் மற்ற இடங்களின் அமைதிக்காக காஷ்மீரத்தை தாரை வார்க்க வேண்டுமா ?

இல்லை - 76% (காஷ்மீர் இந்தியா வசம் இருக்கத் தான் வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளார்கள்!)

ஆம் - 24%

4. வளர்ந்த நாடுகளின் (இஸ்லாமிய நாடுகளை நோக்கிய) தவறான கொள்கைகளின் விளைவால் இந்தியாவில் தீவிரவாதம் பெருகியதா ?

ஆம் - 61%

இல்லை - 35%

5. பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் அமைந்துள்ள தீவிரவாத முகாம்களை இந்தியா அழிக்க வேண்டுமா ?

ஆம் - 69% (இப்படி அழிப்பதால், பெரிய அளவில் போர் மூண்டு விடும், பாகிஸ்தான் நம் மீது அணுகுண்டு வீசி விடும் என்று பெருவாரியான மக்கள் நம்பவில்லை, அஞ்சவும் இல்லை என்பது கவனிக்க வேண்டியது!)

இல்லை - 26% (இவர்கள் சற்று பயந்தவர்கள் :-) )

மேலே விடுபட்ட கேள்விகளுக்கான சர்வே முடிவுகளை (நகர வாரியாகவும் சதவிகிதம் தரப்பட்டுள்ளது) கீழே உள்ள படங்களில் காணலாம்.



நன்றி: டைம்ஸ் ஆஃப் இண்டியா
.

Thursday, December 11, 2008

484. எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாங்க. இந்தியா ரொம்ம்ம்பபபப நல்ல நாடுப்பா !!!

தினமலர் நாளிதழில் வந்த வாசகர் ஒருவரின் கருத்து இது. சிரிப்பாக இருந்தாலும் சிந்திக்க கூடிய ஒரு விசயத்தை இதன் மூலம் சொல்லி இருக்கிறார். பாருங்கள். மெயிலில் இதை என் கவனத்திற்கு கொண்டு வந்த நண்பர் கவிஞர் பிரபுவுக்கு நன்றி :) .
********************************
இந்த பதிவு யாரையோ கிண்டல் செய்ய வேண்டும், நக்கல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நையாண்டி நோக்கில் எழுதப்படவில்லை. நடப்பதை கண்டு வலியிலும், கோபத்திலும் எழுதியது.

தீவிரவாதி 1: நாம பனிரெண்டு பேர அனுப்பி, இருநூறு மக்களை கொன்னுருக்கோம். ஆனா இந்திய அரசு, தீவிரவாதிகளுடனான போரில் வெற்றி, சதி முறியடிப்பு பேசிக்கிறாங்களே?

தீவிரவாதி 2: அதான் எனக்கும் புரியல. டிபன் பாக்ஸ்ல குண்டு வச்சோம். ஒரு மாசத்துல மறந்திட்டாங்க. சைக்கிள்ள குண்டு வச்சோம். ரெண்டு மாசத்துல மறந்திட்டாங்க. என்ன பண்ணினாலும் அதிகபட்சம் மூணு மாசத்துல மறந்திடுறாங்க.

தீவிரவாதி 1: அதனால தான் இந்த தடவை, ஏழை, நடுத்தர மக்களை விட்டுட்டு, இந்திய அரசு அக்கறை எடுத்துக்கிற மேல்தட்டு மக்களை தாக்குனோம்.

தீவிரவாதி 2: அதுக்கும் எந்த விதமான பிரயோஜனம் இருக்குற மாதிரி இல்ல. நாம நடத்தின தாக்குதல வச்சி அரசியல்வாதிங்க இப்பவே அவனுங்களுக்காக ஒட்டு பொறுக்க ஆரம்பிச்சிட்டாங்க.

தீவிரவாதி 1: எனக்கென்னமோ, ஒரு நல்ல விஷயம் நடக்குற மாதிரி இருக்குது.

தீவிரவாதி 2: என்ன?

தீவிரவாதி 1: ஏதோ, தகவல் பரிமாறிக்கணும்'ன்னு நம்ம பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. தலைவர கூப்பிட்டு இருக்காங்க. போயிட்டு வந்ததும், அவர்கிட்ட என்ன ஏதுன்னு ட்டுட்டு அடுத்த முறை அதுக்கு ஏத்த மாதிரி பிளான் பண்ணனும். மாட்டிக்க கூடாது.

தீவிரவாதி 2: மாட்டினாலும் பிரச்சனை இல்லை. ஏன்னு சொல்லு?

தீவிரவாதி 1 (யோசித்துவிட்டு): கருணை மனு போட்டுட்டு வெளிய வந்திடலாம். அதானே? சரியா?

தீவிரவாதி 2: ஆமாம். ஆமாம். அதே மாதிரி, அடுத்த முறை இந்தியாவுல கொஞ்சம் ஆளுங்கள நமக்காக ஏற்பாடு பண்ணினா போதும்.

தீவிரவாதி 1: ஏன்?

தீவிரவாதி 2: நமக்காக வேல பார்க்க, நிறைய டிவி சானல்கள் இருக்காங்க. நம்மளோட சாட்டிலைட் போன் மூலமா, பேச மட்டும்தான் முடியுது. ஆனா, அவுங்க நமக்காக லைவ் டெலிகாஸ்ட்'யே பண்றாங்க. அது மட்டும் இல்லாம, கமாண்டர்ஸ் கிட்ட பேசி என்ன பிளான்னு கேட்டும் சொல்றாங்க. ரொம்ப யூஸ்புல்லா இருக்கு.

தீவிரவாதி 1: கரெக்ட். அடுத்து எங்க டார்கெட் பண்ணலாம்? சவுத் இந்தியாவுல பண்ணிரலாமா? சென்னை எப்படி?

தீவிரவாதி 2: அங்க வேண்டாம்.

தீவிரவாதி 1: ஏன்?

தீவிரவாதி 2: நாம கஷ்டப்பட்டு குண்டு வைப்போம். ஆனா அங்க இருக்குற அரசியல்வாதிகள் குண்டு வச்சது யாருன்னு அவுங்களுக்குள்ள அடிச்சிக்குவாங்க. ஆளுங்கட்சி, எதிர்கட்சியை சொல்லுவாங்க. எதிர்க்கட்சி, ஆளுங்கட்சியை சொல்லுவாங்க. கடைசில நம்மள மறந்திடுவாங்க.

தீவிரவாதி 1: ஒ!

தீவிரவாதி 2: அதுமட்டும் இல்ல. டிவிக்காரங்களும், இந்த அளவுக்கு உதவுவாங்கன்னு சொல்ல முடியாது. அவுங்கவுங்க கட்சிகாரங்களையும், சினிமாகாரங்களையும் பேட்டி கண்டுட்டு இருப்பாங்க.

தீவிரவாதி 1: இப்பதான் ஒரு தாக்குதல் பண்ணிருக்கோம். அதுக்குள்ளே இன்னொன்னு பண்ண முடியுமா? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல எடுத்திருப்பாங்களே?

தீவிரவாதி 2: கடல் வழியா வந்தோம்னு எல்லா துறைமுகத்திலையும் பாதுகாப்பு அதிகரிச்சிருக்காங்களாம். ஹோட்டல்'ல தாக்குதல் பண்ணிருக்கோம்னு எல்லா ஹோட்டல்'லையும் பாதுகாப்ப அதிகரிக்க சொல்லி இருக்காங்களாம். இவனுங்க எப்பவும் இப்படித்தான். கோவில அடிச்சா கோவிலுக்கு பாதுகாப்பு. மார்க்கெட்ட அடிச்சா மார்க்கெட்டுக்கு பாதுகாப்பு. தியேட்டர அடிச்சா தியேட்டர்களுக்கு பாதுகாப்பு. நாம என்ன அடிச்ச எடத்தையா இருப்பி அடிப்போம்?

தீவிரவாதி 1: அதானே? ஆனாலும் எனக்கு வர வர வன்முறை மேல நம்பிக்கையே போயிடுச்சி.

தீவிரவாதி 2: ஏன்?

தீவிரவாதி 1: எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாங்க.இந்தியா ரொம்ம்ம்பபபப நல்ல நாடுப்பா...

அவனுங்களே வெறுத்து சோர்ந்து தீவிரவாதத்தை விட்டாதான் உண்டு.
************************


நன்றி: தினமலர்

Wednesday, December 10, 2008

483. ரியல் எஸ்டேட் பகற்கொள்ளை ஒய்ந்து வருகிறது!

மாதச் சம்பளக்காரர்கள் இருக்கிறார்கள், அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள், அவர்களும் இந்த நாட்டு மனிதர்கள்தான் என்று இப்போதுதான் இந்த ரீ(ய)ல் எஸ்டேட் நிறுவனங்களுக்குத் தெரிய வந்திருக்கிறதாம். அவர்களுக்குத் தேவையான பட்ஜெட் வீடுகளை ரூ. 20 லட்சத்துக்குள் கட்டிக்கொடுத்து லாபம் பார்க்க முடியுமா என்று யோசிக்கிறார்களாம். என்ன ஒரு ஹிப்பக்கிரசி!

மத்தியமர்களை ஃப்ளாட், வீடு என்றாலே காத தூரம் ஓட வைத்த புண்ணியவான்களுக்கு இப்போது கும்பி காயும்போது, ஞானம் பிறக்கிறது போலிருக்கிறது.மேலும் அரசுத் துறைகள் நகரங்களுக்குள் பல நல்ல இடங்களை வீணாகப் பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறன என்று இந்த ரியல் எஸ்டேட் பகற்கொள்ளைக் கூட்டத்திடமிருந்து குற்றச்சாட்டு வேறு! ஏற்கனவே இவர்களெல்லாம் ஒவ்வொரு ஏரியையும் துர்த்து, புறம்போக்கு நிலங்களை எல்லாம் அபகரித்து, பூங்காக்களை எல்லாம் இடித்து நிரவி, கொள்ளை அடித்தது போதாதா?

குடியிருக்க வீடு என்பது ஓர் அடிப்படைத் தேவை, சந்தேகமில்லை. ஆனால், திடீரென்று அது தான் ஒரே தேவை என்பதுபோல் ஓவர் பில்டப் கொடுத்து, அந்தத்துறை விழுந்தால், பொருளாதாரமே காலி என்று இந்தியாவில் பேசுவது மிகவும் பைத்தியக்காரத்தனம். ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், தேவையில்லாமல் மத்திய அரசின் மேல் அழுத்தம் கொடுக்கிறார்கள். அரசை ஏன் கேட்கறீர்கள்? நீங்கள் கொள்ளை அடிக்க இடம் பிடிக்க அலைந்தீர்கள்! உங்களால்,

எந்த மத்தியமர் அல்லது சாதாரண மாதச்சம்பளக்காரன் பயன் அடைந்தான்? இன்றைக்கு கும்பி காய்கிறது என்றால் அதையும் அனுபவியுங்கள். ஏற்கனவே திண்டாடிக்கொண்டிருக்கும் அரசை எதற்கு இன்னும் டார்ச்சர் செய்கிறார்களோ?

வங்கிகளின் வீட்டுக்கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டுமாம். மக்கள் லோன் போட்டு இவர்களிடம் (ஊருக்கு பல மைல் அப்பால்) ஃபிளாட் வாங்கி இவர்கள் மீண்டும் கொள்ளை லாபம் பெற உதவ வேண்டுமாம்! அதற்கு, ஒரு சின்ன வாடகை வீட்டிலேயே ஊருக்குள் இருந்து கொள்வது மேல். தற்போது ஏற்பட்டிருக்கும் 10-15% ரியல் எஸ்டேட் விலை வீழ்ச்சி என்பது குறைவே! இன்னும் 20% குறைய வேண்டும். ஏனெனில், அந்த அளவுக்கு ஃபிளாட் விலை விஷம் போல் (செயற்கையாக) ஏற்றப்பட்டிருக்கிறது, கடந்த 2-3 வருடங்களில்!

மெல்ல மெல்ல வீட்டுக் கடன் வட்டியை நிச்சயம் 8 சதவிகிதத்திற்குள் கொண்டு வ்ர வேண்டும். அது போல, அடிக்கடி அதை மாற்றாமல் இருத்தல் நலம். ஆனால் இதெல்லாம், ரியல் எஸ்டேட் முதலாளிகள் வீடு/ஃபிளாட்களின் விலையை "நார்மல்" லெவலுக்கு கொண்டு வந்த பிறகு செய்யலாம்.

உண்மையில் இன்று இவர்கள் லக்சுரி அப்பார்ட்மெண்ட் என்று சொல்லிக் கொண்டு 80 லட்சத்தில் இருந்து 1 கோடி வரை வைத்து விற்கும் வீடுகளையே 40 லட்சத்திற்கு தாராளமாக விற்கலாம் அவ்வளவு லாபம் இதில் இருக்கிறது. இவர்களுக்கு எல்லாம் அரசு தரப்பிலிருந்து காசு கொடுக்கக் கூடாது. இவர்கள் 20 லட்சத்தில் ஃபிளாட் கட்டிக் கொடுத்தால் கூட, இன்றிருக்கும் நிலையில் நிறைய பேர் வீடு வாங்க முன் வர மாட்டார்கள்.

இவர்கள் 80 லட்சத்திற்குக் கட்டிக் கொடுக்கும் வீடே கண்றாவியாக இருக்கும் பொழுது 20 லட்சத்தில் எந்த லட்சணத்தில் கட்டிக் கொடுப்பார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். இப்பொழுதைக்கு கட்ட ஆரம்பிக்கப் போகும் வீடுகளுக்குக் காசு முதல் போட்டால் அந்த அட்வான்ஸ் திருமபக் கிடைப்பது சிரமம் தான். கட்டி முடித்த வீடுகளை மட்டுமே வாங்க வேண்டும், அது கூட இடத்தைப் பொருத்து. சதுர அடி ரேட் ரூ1750 முதல் ரூ4000 க்குள் இருந்தால் மட்டுமே, வாங்குவது உசிதம்.

எ.அ.பாலா

Tuesday, December 02, 2008

478. வல்லரசு என்றொரு கனவு- கி அ அ அனானி - பகுதி 2

வாசித்து விட்டுத் தொடரவும்:
வல்லரசு என்றொரு கனவு- கி அ அ அனானி

நமது கையாலாகாத்தனத்தில் உழன்று கொண்டிருக்கும் இந்த வேளையில், இது போல் மேலும் மேலும் நம் மேல் தீவிரவாதங்கள் நிகழ்த்தப்படும் என்பதையும் ஏற்றுக் கொள்வோம். இதுதான் நம்மைப் போன்ற ஒரு மூன்றாம் உலக நாட்டின் மூன்றாந்தரமாக நடத்தப்படும் குடிமகனின் நிலையாக இருக்கும். நாம் இதைப் பற்றி செய்யக் கூடியதெல்லாம் திட்டி நாலு வார்த்தை பேசுவதும், எழுதுவதும் அதுவும் சுய பச்சாதாபத்தினாலும் அரசாங்கத்தின் மேல் ஏற்படும் வெறுப்பினாலும். இன்றைய மிதமிஞ்சிய வேதனை உணர்ச்சிகளும் கோபங்களும் படிப்படியாய் மறைந்து போகும்.

இன்னும் சிலவாரங்களில் நமது வழமையான எண்ணங்களிலும், வேலைகளிலும், டிவி சீரியல்களிலும் மூழ்கி விடுவோம். இதையும் இந்தியா எதையும் தாங்கும், மறக்கும், மன்னிக்கும் இறையாண்மையுடைய நாடு என்று சிலர் பெருமை பேசக் கூடும். நாம் இன்னும் ஒரு முறை சில தீவிரவாதிகளால் வன்புணரப்பட்டதால் வழியும் ரத்தத்தை துடைத்துக் கொண்டு இன்னும் ஒரு முறை வேறு சில தீவிரவாதிகளால் வண்புணரப்பட தயாராகி விடுவோம்.

ஏனென்றால் நமக்குக் கிடைத்ததெல்லாம் போலி மதச்சார்பின்மை பேசித்திரியும் மாக்களும், மந்திரிகளும், அரசியல்வியாதிகளும் தான். தீவிரவாதத்தினால் எத்தனை மனிதர் மடிந்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அக்கரை காட்டாமல் அந்த நிகழ்வின் மூலம் ஓட்டுகளை பொறுக்க எப்படியெல்லாம் நாடகமாடலாம் என சதா சர்வகாலமும் சிந்திக்கும் கபடம் நிறைந்த அரசியல்வாதிகள் இருக்கும் வரை நமக்கு உய்வு என்பது கிடையாது. தீவிரவாதம் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து பாராளுமன்றத்தையே தாக்கும் வரை வந்த பின்னும்.. அது நடந்து 7 ஆண்டுகள் ஆகியும்.. அந்தோ பரிதாபம்..அதிலும் செத்தது மந்திரியோ, எம்பியோ அல்லாமல் சாதாரணக் காவலர் தான் என்பதால் அதுவும் அரசியல் நாடகத்தில் ஒரு அங்கமாய் மாறிப்போனது.

இங்கே பாபாசாஹேப் அம்பேத்கர் சொன்னதை நினைவு கூர்வது அவசியமாகிறது.

APPEASEMENT means buying off the Aggressor by conniving at his acts of murder, rape, arson and loot against INNOCENT persons who happen to be the victims of his displeasure... the policy of concession has increased Muslim aggressiveness, and what is worse, Muslims interpret these concessions as a sign of DEFEATISM on the part of the Hindus and the ABSENCE of the Will to resist.

This policy of appeasement will involve the Hindus in the same fearful situation in which the Allies found themselves as a result of the policy of appeasement which they adopted towards HITLER. This is another Malaise, no less acute than the malaise of SOCIAL STAGNATION. Appeasement will surely aggravate it

அவர் அன்று கூறியது பல ஆண்டுகளுக்குப் பின்னும், இன்றும் பொருந்தி வருகிறது.

தீவிரவாதத்தினால் சாகும் ஆயிரமாயிரம் அப்பாவிகளுக்காய் கவலைப் படாமல், தீவிரவாதியின் சிறுபான்மை இனம் நோகுமென்றும், தீவிரவாதியின் மனித உரிமைக்குப் பாதுகாவலர்களாகவும் கொடி தூக்கிக் கொண்டு கிளம்பி விடுவார்கள் நமது மனித உரிமைக் காவலர்கள். தீவிரவாதமே தேச விடுதலைப் போராய் திரிக்கப்படும் அவலமும் இதில் அடங்கும். தீவிரவாதிகளைக் கூட மன்னிக்கலாம், மதத்தின் பெயரால் தவறாக போதிக்கப்பட்டதால், மூளைச்சலவை செய்யப்பட்டதால், உச்சக்கட்ட வெறுப்பில் மனம் பேதலித்ததில் தீவிரமான குற்றத்தை புரிபவர்கள் அவ்விளைஞர்கள் என்று சில சமயங்களில் எண்ண முடியும்.

ஆனால், அவர்களை இந்த நிலைக்குத் தள்ளிய தீவிர மதவாதிகளும், தேசியத்தின் மேல் நம்பிக்கை அற்ற போலி செக்யூலரிஸ்ட்களும் தான் தீவிரவாதிகளை விட ஆபத்தானவர்கள். தீவிரவாதத்தால் செத்தொழிந்த சாதாரண மனிதருக்காய் ஒரு சொட்டுக் கண்ணீர் விடுவதை விட, கொன்ற தீவிரவாதியின் மனித உரிமைக்காக ஓங்கிக் குரல் கொடுத்து, தனது அறிவுசீவித் தனிப்புத்தியை நிறுவிக் கொள்வதாய் சுயவிளம்பரத்திற்காக ஃப்ளாகிலும், பேப்பரிலும், டிவியிலுமாக பிதற்றிக் கொண்டு திரியும் கூட்டத்தைப் பற்றி என்ன சொல்வது ? :-(

தீவிரவாதத்திற்கு எதிரான நமது போராட்டத்திற்கு தொடக்கமாக மத்திய அரசு

1. இந்தியா முன்வைத்த சிலபல நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை பாகிஸ்தானுடன் எல்லாவகையான உறவையும் முறித்துக் கொள்ளலாம். இப்போது இருப்பதை விட பெரிய கேடு ஒன்றும் நேரப் போவதில்லை.

2. நில, கடல் எல்லைப் பாதுகாப்பை 3 மடங்கு தீவிரமாக்கலாம். தீவிரவாத ஒழிப்புக்கென்று ஒரு அமைச்சகதை உருவாக்கலாம். ஒவ்வொரு மாநிலத்திலும், அதற்கென்று ஒரு துறை அமைப்பதுடன், பிரத்யேகமாக தனிப்படை ஒன்றை நிறுவலாம். அனைத்து அரசியல்வாதிகளின் NSG பாதுகாப்பை பாதியாகக் குறைத்து, இந்த தனிப்படைக்கு அந்த NSG வீரர்களை இட்டு வரலாம்!


மேற்கூறிய இரண்டு விசயங்களைக் கூட செய்யத் துப்பில்லை என்றால், நாம் வளர்ந்த நாடாவது, வல்லரசுக் கனவாவது, மண்ணாங்கட்டியாவது!!!! சர்தான்...போடாங்....

By கி அ அ அனானி

Friday, November 28, 2008

473. மும்பைத் தாக்குதல் - Update

இப்பதிவு, டிவி வழி செய்திகள் கிடைக்கப் பெறாதவர்களுக்காக, கடைசியாக வந்த தகவல்களின்படி,

1. தாஜ் ஹோட்டலில் ஒரு தீவிரவாதி சுற்றிக் கொண்டிருக்கிறான். கிட்டத்தட்ட 10-15 விருந்தினர்கள் மீட்கப்பட வேண்டும். 2 வெடிச் சத்தங்கள் கேட்டன.

2. டிரைடண்ட்-ஓபரா ஹோட்டலிலிருந்து 50-க்கும் மேற்பட்டவர், NSG கமேண்டோக்களின் காலை ஆப்பரேஷனின் முடிவில் மீட்கப்பட்டனர். Hats Off to NSG ! ஒரு 6 மாத இத்தாலிக் குழந்தையும் அதில் அடக்கம். பெரும்பாலானவர்கள் அயல்நாட்டவர் தான். சில பிணைக்கைதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஆபரேஷன் தொடர்ந்து கொண்ட்டிருக்கிறது. இன்னும் ஒரு 100 பேர் உள்ளே மாட்டிக் கொண்டிருக்கின்றனர்.

3. நாரிமன் இல்லத்தில், ஹெலிகாப்டர் மூலம் NSG / Naval கமேண்டோக்கள் காலையில் இறக்கி விடப்பட்டனர். மூன்றாம் தளத்தில் உள்ள தீவிரவாதிகளுடன் பயங்கரச் சண்டை நடந்து கொண்டிருக்கிறது. 4-5 இஸ்ரேலிய பிணைக்கைதிகள் இருக்கக்கூடும்.

4. இஸ்ரேல், இந்த கமேண்டோ ஆபரேஷனுக்குத் தேவையான (உத்திகள் சார்ந்த) ஆலோசனையையும், வேறு எந்த உதவியையும் தரத் தயாராக இருப்பதாக கூறியுள்ளது.

5. GoC தம்புராஜ், எல்லா இடங்க்களிலும் திட்டமிட்டபடி ஆப்பரேஷன் சென்று கொண்டிருப்பதாகக் கூறினார். எவ்வளவு கமேண்டோக்கள் கொல்லப்பட்டனர் என்ற தகவல் தர இயலாது என்றார். ஒரு NSG மேஜரும், சில வீரர்களும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்திய ராணுவ வழக்கப்படி, ஆபிசர்கள் முன்னின்று தங்கள் அணிவீரர்களை களத்தில் செலுத்துகின்றனர் !! இன்னும் இரண்டு மணி நேரத்தில் ஆபரேஷன் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது. தீவிரவாதிகள் டீஷர்ட் அணிந்த 25-30 வயதினர் என்று தெரிகிறது.

6. பலரும், ஏன் ஒரு 12-15 தீவிரவாதிகளைக் கொல்ல/பிடிக்க தீவிரப் பயிற்சி பெற்ற கமேண்டோக்களுக்கு இவ்வளவு நேரம் ஆகிறது என்று புரியாமல் கேட்கின்றனர். சரியாக திட்டமிடவும், சிவிலியன் உயிரிழப்பு அதிகம் ஏற்படாத வகையில் முன்னேறவும் வேண்டியிருப்பதால், நேரம் தேவைப்படுகிறது.

எது எப்படியோ, I SALUTE THESE UNSUNG, NAMELESS BRAVE AND COURAGEOUS MEN FROM THE NSG(ARMY) !! இந்த உண்மையான ஹீரோக்களை என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

எ.அ.பாலா

Also read: மும்பை பயங்கரம்

Sunday, November 16, 2008

469. அடிச்சுக்கிட்டு சாகட்டும் அப்படியே விடுங்க!

அடிச்சுக்கிட்டு சாகட்டும் அப்படியே விடுங்க!

முதல்வன் ஸ்டைலில் நடந்த நிஜம் ... சட்டக்கல்லூரியில் சிலையான போலீஸ்!


வன்முறையை முதலில் தெளித்தது எந்த சாதி? ரத்தத் தில் அதிகம் குளித்தது எந்த சாதி? இதுவல்ல பிரச்னை! புனிதமான கல்வி வளாகத்தினுள் கத்தியும், இரும்புக் குழாயும், உருட்டுக் கட்டைகளுமாக யுத்தத்தை அரங்கேற்றியிருப்பது, மாணவ சாதி! அதை சிலையாக நின்று வேடிக்கை பார்த்தது, போலீஸ் சாதி! இதுதான், 'இந்த சமூகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது?' என்ற கலவரத்தை ஏற்படுத்துகிறது!

சென்னை 'அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி'யில் கடந்த 12-ம் தேதி மாலையில் நடந்த கோர சம்பவம் மீடியாக்களின் வாயிலாக வெளியானதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த தமிழகமும் பதைபதைப்பின் பிடியிலிருந்து இன்னமும் மீளாமல் தவிக்கிறது! 'இரண்டு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்தான், வெறித்தனமான இந்தத் தாக்குதலுக்கு முக்கிய காரணம்' என்பது பதைபதைப்பைக் கணிசமாகவே கூட்டியிருக்கிறது.

தாக்குலில் படுகாயப்பட்ட பாரதி கண்ணன், ஆறு முகம், அய்யாதுரை ஆகிய மூன்று மாணவர்களும் சென்னை பொது மருத்துவமனையின் அடுத்தடுத்த படுக்கைகளில் அனுமதிக்கப்பட்டிருக்க... நாம் அங்கே விசிட் அடித்தோம்.

சட்டக் கல்லூரியின் நுழைவாயிலில் அடித்துத் துவைக் கப்பட்ட பாரதி கண்ணன் நைந்துபோய்க் கிடந்தார். ஒரு கையை கட்டித் தொங்கப் போட்டிருந்தார்கள். உடலில் காயம் இல்லாத இடமே இல்லை. பேசும் நிலையிலும் அவர் இல்லை. அங்கே இருந்த மாணவர்களிடம் பேசினோம். ''பெயர், போட்டோ போட்டுடாதீங்க...'' என்றபடி பேச ஆரம்பித்தார்கள்.

''பல வருடங்களாகவே சட்டக் கல்லூரியில் சாதி பிரச்னை மாணவர்களை சீரழிச்சுக்கிட்டு இருக்கு. ஹாஸ்டல் மாணவர்களுக்கும் ரெகுலர் மாணவர் களுக்கும் சச்சரவு வராத நாளே கிடையாது. எஸ்.சி. மாணவர்கள், எஸ்.சி. அல்லாத மாணவர்கள் என்று இரண்டு குழுக்களாகத்தான் செயல்படுறாங்க.

நாங்க 'முக்குலத்தோர் மாணவர் பேரவை' என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கி செயல்பட்டுக் கொண்டிருந்தோம். தேவர் ஜெயந்தி அன்று அடிக்கப்பட்ட நோட்டீஸில் கல்லூரியின் பெயரான அம்பேத்கர் பெயரைப் போடவில்லை. சம்பவத்தன்னிக்கு மாலையில் செமஸ்டர் எக்ஸாம் நடந்துகொண்டிருந்த சமயத்தில், சாதி ரீதியான தேசிய கட்சி ஒன்றின் கொடி கட்டிய காரில் ஒரு கும்பல் கல்லூரிக்குள் வந்தது. அவர்கள் கல்லூரிக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாதவர்கள். அவர்கள் அந்தக் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவரின் அடியாட்கள். அவர்கள்தான் இத்தனை அராஜகத்தையும் நடத்தினாங்க. அவர்களில் எங்கள் காலேஜ் ஓல்டு ஸ்டூடண்ட்ஸ§ம் இருந்தாங்க.

கல்லூரியின் இன்சார்ஜ் முதல்வரா இருக்கிற ஸ்ரீதேவ், ஏற்கெனவே விடுதியில் வார்டனா இருந்தவர். அவர் அனுமதி கொடுக்காமல் போலீஸ் கல்லூரிக்குள் வரமுடியாது. ஆனால், பிரின்சிபாலோ போலீஸை கூப்பிடவே இல்லை. போலீஸ் உள்ளே வர அவர் அனுமதித்திருந்தால், பிரச்னை இந்த அளவுக்குப் போகாமல் தடுத்திருக்கலாம். போலீஸ் இதில் தலையிடாது என்று தெரிந்தேதான் படிப்படியாகத் திட்டம் போட்டுக் காரியத்தைக் கனகச்சிதமாக அரங்கேற்றியிருக்கிறார்கள்'' என்று சீறினார்கள்.

மருத்துவமனை வார்டுக்கு வெளியே பாதிக்கப்பட்ட கொதிப்பும் சோகமுமாக நின்றிருந்தனர், மாணவர்களின் உறவினர்கள். அவர்களில் ஒரு பெண் அங்கே நின்றிருந்த போலீஸாரைப் பார்த்து, ''டி.வி-யில பாத்துட்டு ரத்தமே கொதிக்குதுய்யா... பாவிங்களா! உங்க பொண்டாட்டி புள்ளைங்கள இப்படி நாயைப் போல அடிச்சா இப்படி வேடிக்கை பாத்துக்கிட்டா இருப்பீங்க? உங்களுக்கு எல்லாம் எதுக்கு காக்கிச் சட்டை? கழற்றி நெருப்புல போடுங்க..!'' என ஆத்திரப்பட... போலீஸ் அதிகாரிகள் முதல் கான்ஸ்டபிள்கள் வரை 'சட்டக் கல்லூரி வாசல் போஸ்' போலவே அசையாமல் நின்றார்கள்.

சீறிய, லில்லி கல்பனா என்ற அந்தப் பெண்ணிடம் பேசினோம். ''இங்கே இருக்கிற தமிழனையே போலீஸ் தலையிட்டுக் காப்பாத்த முடியல... இலங்கைத் தமிழனுக்காகக் கண்ணீர் விடுறானுங்க, இந்த அரசியல்வாதிங்க! அடிமேல அடி விழுகுறப்ப மனிதாபி மானத்தோட காப்பாத்த முடியாத போலீஸை வெச்சு என்ன அரசாங்கம் நடத்தி என்ன பிரயோசனம்?'' என்று குமுறினார்.

தாக்கப்பட்ட மாணவர் பாரதிகண்ணனின் (கத்தியுடன் பாய்ந்து சென்று, கடைசியில் நையப் புடைக்கப்பட்டவர்) தந்தை கருப்பசாமியிடம் பேசினோம். ''தேவகோட்டைக்கு பக்கத்துல என் சொந்த ஊர். நல்லா படிக்கணும்னு சென்னைக்கு மகனை அனுப்பினேன். டி.வி-யில பாத்துட்டுத் துடிச்சுப்போய் வந்தேன். ஹைகோர்ட்டு, கோட்டை, சட்டசபை எல்லாம் நடந்துகிட்டு இருக்கிற எடத்துக்குப் பக்கத்துலேயே இவ்வளவு கொடூரம் நடந்திருக்கு! இதை எல்லாம் பாக்குறப்போ, 'நாம தமிழ்நாட்டுலதான் இருக்கோமா.. இல்ல வேறு எங்கேயோ இருக்கோமா'னு நினைக்கத் தோணுது. சாதி மோதல்தான் காரணம்னு சொல்லுறாங்க... எந்த சாதியா இருந்தாலும் ஆளுறவங்கதானே காப்பாத்தணும்!'' என்றார்.

மாணவர்களில் சிலரை முதல் கட்டமாகக் கைது செய்திருக்கும் நிலையில், எஸ்.சி. பிரிவைச் சேர்ந்த மாண வர்களோ, ''கிராமத்தைவிட்டு இங்கே படிக்க வந்தால், இங்கும் எங்களுக்கு எதிரான ஒடுக்குதல் தொடர்கிறது. அரசுத் தரப்பிலிருந்து எங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளைக்கூட கிண்டல் செய்கிறார்கள் சிலர். இதனால் எங்கள் தரப்பு மாணவர்கள் மத்தியில் எழும் குமுறலை, கல்லூரிக்கு வெளியே உள்ள சில சக்திகள் வசமாக விசிறிவிட்டு, தங்களுக்குச் சாதகமாகப் பல குழப்பங்களை அரங்கேற்றிக் கொள்கின்றன'' என்கிறார்கள்.

இப்போது சட்டக் கல்லூரி வளாகங்களில் போலீஸ் குவிக்கப்பட்டிருக்கிறது; கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படிருக்கிறது. இருந்தும் கல்லூரிக்குள் மாணவர்கள் கொஞ்சம் பேர் இருந்தார்கள். ஒரு சில பேராசிரியர்களும் இருந்தனர்.

''இவ்வளவு நடந்தும் நீங்களாக போலீஸை அழைக்க வில்லையே, ஏன்?'' என அவர்களிடம் கேட்டோம்.

அவர்களோ, ''தேவர் ஜெயந்தி விழா அன்னிக்கு நடந்த பிரச்னை மறுபடி எதிரொலிக்கும்னு எதிர்பார்த்தோம். நேத்து பரீட்சை நடக்கும்போது கண்டிப்பா குறிப்பிட்ட மாணவர்கள் வருவாங்கனு தெரிஞ்சே அந்தக் கும்பல் தயாரா காத்திருந்தது. இவங் களும், தங்கள் மீது தாக்குதல் நடக்கலாம்னு தெரிஞ்சு கையில் ஆயுதங்களோடுதான் வந்திருந்தாங்க. மோதல் உறுதினு புரிஞ்சுகிட்டு, பகல் இரண்டரை மணிக்கே போலீஸ§க்கு தகவல் அனுப்பிட்டோம். இதோ பாருங்க ஆதாரத்தை!'' என்று சொல்லி, ஐ.ஜி. அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட புகாரின் அக்னாலஜ்மெண்ட் நகலை எடுத்துக் காட்டினார்கள்.

அங்கே இருந்த மாணவர் களிடம் பேசியபோது, ''டிகிரி முடிச்சிட்டு வர்றவங்க இங்கே மூணு வருஷம் படிக்கணும். ப்ளஸ் டூ படிச்சிட்டு வர்றவங்க ஐந்து வருஷம் படிக்கணும். இதுல ஐந்து வருஷம் படிக்கிற மாணவர்களுக்குள்ளதான் பிரச்னை அவ்வப்போது வெடிக்கும். இப்ப நடந்த சம்பவத்தைவிட மோசமான தாக்குதல்கள்கூட எங்க காலேஜுல நடந்திருக்கு. போன வருஷம் மே மாதம் 28-ம் தேதி அன்னிக்கு விடுதிக்குள்ள நடந்த கொலைவெறித் தாக்குதல் இதைவிட மோசமானது. குறிப்பிட்ட ஒரு சாதி பையன் இரும்பு நாற்காலியை சத்தம் வரும்படி நகர்த்திப் போட்டான்னு பிரச்னையை ஆரம்பிச்சாங்க. ஏகப்பட்ட ஸ்டூடன்ட்ஸ§க்கு ரத்த காயம். ஹாஸ்டலுக்கு உள்ளேயே கத்தி, உருட்டைக் கட்டையெல்லாம் தயாரா பதுக்கி வச்சிருக்காங்க. இப்போதைய சம்பவத்தின்போதும், சுமார் அஞ்சு கிலோமீட்டர் தள்ளியிருக்கிற ஹாஸ்டலில் இருந்துதான் ஆயுதங்களை எப்படியோ காலேஜுக்குள் கொண்டாந்திருக்காங்க. மோதல்களுக்கான அடிப்படை எல்லாமே ஹாஸ்டலில் இருந்துதான் ஆரம்பிக்குது. இதை ஓரளவுக்காவது கட்டுப்படுத்தணும்னா பிற்படுத்தப்பட்ட சமூகத்து ஸ்டூடன்ட்ஸ§க்குத் தனியா விடுதி கொண்டு வரணும்'' என்றார்கள்.

கல்லூரி ஊழியர்களிடம் பேசினோம். ''மயங்கிய பிறகும் பாரதி கண்ணன் அடித்துத் துவைக்கப்பட்ட நுழைவாயிலுக்கு முன்பு இளங்கோ என்பவர்தான் வாட்ச் மேனா இருந்தார். அவரை மூணு மாதத்துக்கு முன்பு எழும்பூர் மருத்துவமனைக்கு மாத்திட்டாங்க. அவர் மீது அன்பும் மரியாதையும் எல்லா மாணவர்களுக்கும் உண்டு. அவர் இருந்திருந்தா... ஒருவேளை இந்தளவுக்குப் பிரச்னை வளர்ந்திருக்காது. உள்ளேயும் அப்படித்தான். பிரின்சிபால், புரொபசர் எல்லாம் தடுத்தபோதும் அவங்களை ஒருமையில் மிரட்டித் துரத்திய மாணவர்கள், கடைசியில் கேண்டீன்ல வேலை பார்க்கும் ஒரு பெரியவர் தடுத்த பிறகுதான் கொஞ்சம் அடங்குனாங்க. அவர் தன்னோட துண்டைத் தரையில் எடுத்துப்போட்டு, 'இதைத் தாண்டி யாரும் வரக்கூடாது... இது என் மேலே சத்தியம்'னு கட்டளை போட்டார். சோறு போட்ட அவர் பேச்சுக்குத்தான் மாணவர்கள் ஓரளவு அடங்கினாங்க!'' என்றனர்.

அடுத்து அவர்கள் சொன்னதுதான் அதிர்ச்சியின் உச்சம்-

''கேட் பக்கத்துல நிறைய போலீஸ்காரங்க நின்னாங்க. இங்கே நடக்கிற மோதல் பத்தி உடனுக்குடன் கமிஷனர் ஆபீஸ§க்குத் தகவல் சொல்லி இன்ஸ்ட்ரக்ஷன் கேட்டுக்கிட்டே இருந் தாங்க. அப்ப போலீஸ் மைக் கிலிருந்து யாரோ பெரிய அதிகாரியிடமிருந்து, 'உத்தரவு வரும் வரை எதுவுமே செய்ய வேண்டாம்... அந்த காலேஜ் பசங்களுக்கு இதே பொழைப்பா போச்சு. அடிச்சுக்கிட்டு சாகட்டும்... அப்படியே விடுங்கய்யா!'னு ஒரு தகவல் வந்துச்சு. கிட்டத் தட்ட 'முதல்வன்' படத்தில் வர்ற காட்சி மாதிரியேதான் அது இருந்தது!'' என்றனர் அவர்கள்.

நெருப்பாக விவகாரம் தகிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து, உதவி கமிஷனர் உட்பட சஸ்பெண்ட் என்று அறிவித்த அரசாங்கம்... 'சம்பவ ஸ்தலத்தில் இருந்த போலீஸார் சும்மா வேடிக்கை பார்க்க என்ன காரணம்?' என்று சில தகவல்களை நம்பகமான வட்டாரங்களில் இருந்து கேட்டுப் பெற்றுக் கொண்டதாம். அதைத் தொடர்ந்து, சென்னை மாநகர கமிஷனராக இருந்த சேகரை உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றி, அங்கே ராதாகிருஷ்ணனை நியமித்துள்ளது. சென்னை வடக்கு இணை கமிஷனராக இருந்த அபய் குமார் சிங் மாற்றப்பட்டு விட்டார். கூடுதல் போலீஸ் கமிஷனராக ஏ.கே.விசுவநாதன் நியமிக்கப்பட்டிருக்கிறார். சென்னை வடக்குபொறுப்பையும் அவர்கவனிப்பார். சில நாட்களுக்கு முன்பே துணை கமிஷனராக நியமிக்கப் பட்ட ஆசியம்மாளையும் அங்கிருந்து அகற்றி, பிரேம் ஆனந்த் சின்ஹாவை நியமித்துள்ளார்கள்.

இதற்கிடையே, சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறை வெறியாட்டம், சாதிய ரீதியில் தமிழகத்தின் மற்ற சில கல்லூரிகளுக்கும் பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இப்போது பல்வேறு மாவட்டங்களிலும் போலீஸ் அலர்ட்!

காயப்பட்ட மாணவர்களை அ.தி.மு.க. தரப்பினர் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டுப் போக... ''இந்த அரசு முக்குலத் தோருக்கு ஏற்படும் இன்னல்களைக் களைவதில் அக்கறை காட்டுவதில்லை. போலீஸ் மெத்தனத்துக்கு சாதி ரீதியான காரணங்கள் உண்டு'' என்று சொல்லி சாதிய ரீதியான உண்ணாவிரதம், போராட்டம் போன்றவற்றுக்கும் சில அமைப்புகள் தயாராகி வருகின்றனவாம். இதில் மத்திய அமைச்சர் ஒருவரின் சகோதரர், எஸ்.பி-யாக இருந்து ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவரும் அடக்கம்.

நன்றி: ஜுனியர் விகடன்

Saturday, November 15, 2008

468. வாழ்க நற்றமிழ் நாடு (அ) என்ன கொடுமை இது, பாரதி !!!



மாற்றமும் முன்னேற்றமும் கைக்கெட்டிய தூரத்தில் தான் !

Sunday, November 02, 2008

463. நகைச்சுவை வித்தகர் சோ - காபி வித் அனு

நேற்றிரவு விஜய் டிவி ஒளிபரப்பிய 'காபி வித் அனு' நிகழ்ச்சியில் சோ அவர்களும், மௌலி அவர்களும் கலந்து கொண்டு ஒரு கலக்கு கலக்கினார்கள். எதிர்பார்த்தது போல, டோ ண்டு சார் இந்த நிகழ்ச்சி பற்றி ஒரு நீண்ட பதிவு போட்டு தனது 'சோ அபிமானத்தை' மற்றொரு முறை நிரூபித்து விட்டார் ;-) எனவே நான் ஒரு மினி அலசலோடு நிறுத்திக் கொள்கிறேன்!

சோ அவர்களுக்கு satirical / subtle வகை நகைச்சுவை இயல்பாக அமைந்துள்ள ஒரு சங்கதி. அதனால், பார்ப்பவரை அவரால் எளிதில் கட்டிப்போட்டு விட முடிகிறது, அவரைப் பிடிக்காதவர்களைக் கூட :) அவர் பேசியதிலிருந்து சில துளிகள்:

1. யாரோ ஒருவர் சோவை, அவர் வாக்கிங் போகிறாரா என்றதற்கு, அவருக்கே உரித்தான பாணியில், "இல்லை டாக்கிங் மட்டும் தான் போய்க் கொண்டிருக்கிறது" என்றாராம்!

2. அவரது நண்பர் ரங்கா என்பவர் அவரை வற்புறுத்தி ஒரு முறை காலை வாக்கிங்குக்கு அழைத்துச் சென்றாராம். கொஞ்சம் நடந்தவுடனேயே, சோவுக்கு போரடித்து விட்டது. அச்சமயம், அவ்வழியில் நாய் ஒன்று (அவர்களுக்கு முன்னால்) கொஞ்ச தூரம் ஓடிச் சென்று மீண்டும் திரும்பி வந்ததை சோ ரங்காவிடம் காண்பித்து, "ரங்கா, இந்த நாய்க்கும் நமக்கும் இப்ப ஒரு வித்தியாசமும் இல்ல!" என்று சொல்ல அப்செட் ஆன ரங்கா மறந்து கூட சோவை வாக்கிங்குக்கு அழைப்பதில்லையாம் ...

3. அது போலவே, ஒழுங்காக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த நண்பர் ஒருவரிடம் சோ அவர்கள், நல்ல உடற்கட்டு கொண்டவர்கள் ஒரு போது சாதனையாளர்களாக இருந்ததில்லை என்ற சந்தேகத்தை கிளப்பி விட்டு அதோடு, 'ஒரு மனிதனுக்கு ஒன்று கட்டான உடலமைப்பு இருக்க முடியும் அல்லது அறிவாற்றல் இருக்க முடியும், இரண்டும் சேர்ந்து அமைய வாய்ப்பே கிடையாது' என்று சோ நண்பரை மேலும் குழப்பி விட நண்பர் உடற்பயிற்சியை நிறுத்தி விட்டாராம் :)

4. நிகழ்ச்சியின் விளம்பர இடைவேளை ஒன்றுக்கு முன்னால் அனு, சோ மற்றும் மௌலியிடம், "நீங்க ரெண்டு பேரும் நான் சொல்ற டாபிக்ல பேசணும், இப்ப ஒரு சின்ன கமர்ஷியல் பிரேக்" என்றவுடன் சோ, "நீங்க சொல்ற டாபிக்ல பேசணும், நீங்க சொல்றபோது பிரேக், எல்லாம் ஒரே பொம்பளை ராஜ்ஜியமா இருக்கு!" என்று அனுவை ஒரு போடு போட்டது அருமை :)

5. சோ மௌலியையும் விட்டு வைக்கவில்லை! மௌலி தான் நாடகம் எழுத வந்ததற்கு சோ தான் இன்ஸ்லிரேஷன் என்றும், சோவைப் பார்த்து தான் தனக்கு தன்னம்பிக்கை வந்தது என்றும் கூறியபோது இடைமறித்த சோ, 'இவனே (சோ) நாடகம் போடும்போது தன்னால் முடியாதா என்ன என்பதைத் தான் மௌலி மிகவும் பாலிஷாகக் கூறுவதாக' மௌலியை வாரியது ரசிக்கத் தக்கது!

6. அது போலவே, சோ கடந்த 25 வருடங்களாக 'அதே மாதிரி' இருப்பதை மௌலி ஒரு பாராட்டாகக் கூற, சோ அனுவிடம், "கடந்த 25 வருடங்களாக என்னிடம் எந்த improvement-ம் இல்லை என்பதை மௌலி எத்தனை நாசூக்காகச் சொல்கிறார், பாருங்கள்" என்று கூறி ஒரு ஸிக்ஸர் அடித்தார் :)

7. மௌலி, விசு, கே.பி ஆகிய மூவரும் நாடக உலகிலிருந்து சினிமாவுக்குச் சென்று, வெகு விரைவாகவும் எளிதாகவும் அதன் நுணுக்கங்களையும், நெளிவு சுளிவுகளையும் கற்றுத் தேர்ந்து விட்டதையும், தான் அவர்கள் போல வெற்றி பெற இயலவில்லை என்றும் நினைவு கூர்ந்தார்.

8. திருப்பி வைக்கப்பட்ட (பிரபலங்களின்) புகைப்படங்களில் மூன்றைத் தேர்ந்தெடுத்து அவர்களைப் பற்றி (கா.வி.அ) நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட விருந்தினர் பேச வேண்டிய பகுதி உள்ளது. சோ முதலில் ஜெய்சங்கரின் போட்டோவை எடுத்தார். தனது சிறந்த நண்பர், பரோபகாரி, பல தயாரிப்பாளர்களை உருவாக்கியவர், An actor by his own right என்றும் ஜெய்யை மிகவும் சிலாகித்துப் பேசினார்.

அடுத்து சோ எடுத்தது, ஜெயலலிதாவின் போட்டோவை! எடுத்தவுடன், "நமக்குன்னு வருது பாருங்க!" என்று தமாஷ் பண்ணிவிட்டு, தான் அவரை பலமுறை விமர்சித்திருப்பதை சுட்டிக் காட்டி விட்டு, இந்தியாவில் உள்ள பெண் அரசியல்வாதிகளிலேயே திறமையானவர் ஜெயலலிதா என்றும், ஜெவின் courage, confidence, knowledge, administrative abilities ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது அவர் அரசியலில் இன்னும் உயரத்துக்கு செல்ல முடியும் என்றார் !

அடுத்து ஆச்சி மனோரமாவை மிகவும் பாராட்டிப் பேசினார். மனோரமா அன்றிலிருந்து இன்று வரை திரையுலகில் பிரகாசிப்பதைச் சுட்டிக் காட்டி, நடிப்புக்கு ஆண்களில் சிவாஜி என்றால், பெண்களில் மனோரமாவாகத் தான் இருக்க முடியும் என்றார் சோ. நாகேஷின் திறமையையும் மனம் திறந்து பாராட்டினார். அது போல, டி.ஆர். ராமச்சந்திரனுக்குப் பிறகு, சாதாரண தோற்றமுடைய ஒருவர், காமெடி ஹீரோவாக வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்தவர் பாண்டியராஜனே என்று அவரையும் பாராட்டினார்.

9. கலைஞர் பற்றிக் கேட்டபோது, மிகச் சாதாரண நிலைமையிலிருந்து இத்தனை உயரத்தை அவர் அடைந்ததற்கு அவரது கடுமையான உழைப்பும், சாமர்த்தியமும் காரணங்கள் என்றார். அது போல, ரஜினி பல விஷயங்கள் பற்றி வெளிப்படையாக பேசாவிட்டாலும், ஒவ்வொரு விஷயம் பற்றியும் ரஜினிக்கென்று ஒரு தெளிவான கருத்துள்ளதாகவும் சோ குறிப்பிட்டது சற்று ஆச்சரியத்தை வரவழைத்தது ! "ரஜினி வேண்டுமா, கமல் வேண்டுமா?" என்ற கேள்விக்கு, தான் யாருக்கும் வெறிபிடித்த ரசிகன் இல்லை என்பதால் தனக்கு இருவருமே வேண்டும் என்று அரசியல்வாதி ஸ்டைலில் சோ எஸ்கேப் :)

10. நிகழ்ச்சிக்கு சோ தந்த Finishing Touch மறக்க முடியாதது ! அனு சோவிடம், "இந்த நிகழ்ச்சியின் காபி அவார்டை யாருக்கு, எதற்காகக் கொடுப்பீர்கள்?" என்று வினவியதற்கு சோ, எதையும் குடும்பத்தினருக்கே தர வேண்டும் என்ற தற்போதைய தமிழக நடைமுறையின்படி தான் நடக்க விரும்புவதால், அந்த அவார்டை தனது பேத்திக்கே அளிக்க விருப்பமென்றும், "ஊரோடு ஒத்து வாழ வேண்டும்" என்பதும் அதற்குக் காரணம் என்றும் சொல்லி, ஜெயசூர்யா ஸ்டைலில் பாயிண்ட் பவுண்டரி மேல் ஸிக்ஸர் அடித்தபோது, அனுவும் மௌலியும் சிரிப்பை அடக்க சற்று சிரமப்பட்டதென்னவோ நிஜம் :)

சோ அத்தோடு விட்டாரா! தன் 9 வயது பேத்தி நன்றாக 'கவிதை' எழுதுகிறாள், ஆனால் ஆங்கிலத்தில் எழுதுகிறாள் என்று கங்குலி ஸ்டைலில் டைமிங்காக ஒரு ஷாட் அடித்தது சூப்பர் !

இது போல ஒரு 'காபி வித் அனு' நிகழ்ச்சியை இதுவரை பார்த்ததில்லை. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது. Yesterday, it was a real one man show !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, August 08, 2008

452. அந்தோணிக்கு சக்கர நாற்காலி கிடைத்து விட்டது!

எனது இந்தப் பதிவில் இட்ட வேண்டுகோளின் தொடர்ச்சியாக நமது தமிழிணைய நல்ல உள்ளங்களின் ஆதரவோடு திரட்டிய தொகையைக் கொண்டு வாங்கிய (பாட்டரியால் இயங்கும்) சக்கர நாற்காலி நேற்று நண்பர் அந்தோணியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த தானியங்கி சக்கர நாற்காலியின் வாயிலாக அவரால் தானாகவே வெளியிடங்களுக்குச் சென்று வர இயலும். ஒரு முறை பாட்டரியை சார்ஜ் செய்தால், 7 கி.மீ வரை பிரயாணிக்க இயலும். அந்தோணிக்கு சக்கர நாற்காலி கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி என்பது அவர் என்னிடம் தொலைபேசியதிலிருந்தே தெரிந்தது!

இந்த சமயத்தில் பொருளுதவி செய்த அன்பு நண்பர்களுக்கும், அந்தோணியை வாழ்த்திய அன்பர்களுக்கும் என் நன்றியைத் தெரிவிக்கிறேன்.

இதற்கு முன்னால், அந்தோணிக்கு நமது கூட்டு முயற்சியின் வாயிலாக ஒரு மடிக்கணினி வாங்கித் தரப்பட்டது. அது தொடர்பான எனது பதிவையும் வாசிக்கவும். இதன் வாயிலாக, அந்தோணி வீட்டிலிருந்தபடியே கணினி சார்ந்த பணி ஒன்றை மேற்கொண்டு (working from home) தன் தேவைகளுக்கு வேண்டிய பணத்தை சம்பாதிக்க முடிகிறது.

உங்கள் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் அந்தோணி மென்மேலும் வளர்வதற்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கும் !

அந்தோணியின் தமிழ் வலையகம் இது

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, August 02, 2008

451. தமிழ் வலைப்பதிவுகளில் முதன்முறையாக - இட்லிவடையை முந்திய பாலா

ரஜினியின் சுயநலம்-சரத்குமார், தமிழர்களுக்கு அவமானம்-சத்யராஜ்

சென்னை: தனது படம் கர்நாடகத்தில் ஓட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டுள்ளது அவரது சுய நலத்தையே வெளிப்படுத்துகிறது என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

குசேலன் படம் கர்நாடகத்தில் சிக்கல் இல்லாமல் ரிலீஸாக வேண்டும் என்பதற்காக கன்னட அமைப்புகளிடம், தான் ஓகனேக்கல் விவகாரம் குறித்து சென்னையில் பேசியது தவறு, இனிமேல் அப்படிப் பேச மாட்டேன், பேசியதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என்று நேரடியாக மன்னிப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் வருத்தம் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

இது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி சுயநலமாக பேசியுள்ளார் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தாக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தான் பேசியது தவறு என்று ரஜினி கூறியுள்ளார். அவர் இங்குதான் வளர்ந்தார். இப்படிப்பட்ட நிலையில், வருத்தம் தெரிவிப்பதாக ரஜினி கூறியிருப்பது தேவையில்லாத ஒன்று.

தனது படம் ஓட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ரஜினி வருத்தம் தெரிவித்திருந்தால் அது நிச்சயம் சுய நலம்தான். இது தவறான பேச்சு என்றார் சரத்குமார்.

தமிழர்களுக்கு அவமானம்-சத்யராஜ்:

ரஜினியின் வருத்தம் குறித்து சத்யராஜ் கருத்து தெரிவிக்கையில், ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டிருப்பதன் மூலம் தன்னையும், தன்னை வாழவைத்த தமிழக ரசிகர்களையும் அவமானப்டுத்தி விட்டார்.

என்னை பொறுத்தவரை முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன். இதுபோன்ற ஒரு நிலைமை நான் நடித்த படத்திற்கு ஏற்பட்டிருந்தால், தயாரிப்பாளர் நஷ்டபடக் கூடாது என்பதற்காக என் சம்பளத்தை குறைத்துக் கொண்டிருப்பேன் என்றார்.

பரந்த மனப்பான்மை-பாரதிராஜா:

இயக்குநர் பாரதிராஜா கூறுகையில், ரஜினிகாந்த் வருத்தம்தான் தெரிவித்திருக்கிறார். மன்னிப்பு கேட்கவில்லை. தயாரிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதாலும், கர்நாடகத்தில் உள்ள அவருடைய ரசிகர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் பரந்த மனப்பான்மையுடன் அவர் வருத்தம் தெரிவித்து இருக்கிறார் என்றார்.

நியாயம்தான்-கலைப்புலி சேகரன்:

தயாரிப்பாளர் கலைப்புலி சேகரன் கூறுகையில், தனிப்பட்ட முறையிலோ, தனி மனிதராகவோ அவர் மன்னிப்பு கேட்கவில்லை. தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தொழில் ரீதியாக அவர் வருத்தம் தெரிவித்திருப்பதில் நியாயம் உள்ளது. இதைக் கண்டிப்பது சரியல்ல என்றார்.


இந்து மக்கள் கட்சி கண்டனம்:

இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில்,

ஒகேனக்கல் குடிநீர் பிரச்சினைக்காக தமிழ் திரைப்படத்துறையினர் நடத்திய உண்ணாவிரதத்தில் நடிகர் ரஜினிகாந்த் மிக உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை உசுப்பேற்றி பரபரப்பு செய்தியாக்கினார்.

ஆனால் இன்றோ தனது குசேலன் படத்துக்கு கர்நாடகத்தில் ஒரு சில கன்னட வெறியர்களால் மிரட்டல் ஏற்பட்டு அதனால் திரையிட முடியாமல் போய் விடுவோ என்ற அச்சத்தில் கர்நாடக மக்கள் தனக்கு பாடம் புகட்டி விட்டார்கள். இனிமேல் அதுபோல் பேச மாட்டேன் என்று தார்மீக மன்னிப்பு கேட்டுள்ளார். இது ஒட்டுமொத்த தமிழக மக்களையே அவமானப்படுத்தக் கூடிய செயலாகும்.

தமிழக மக்களையும், இளைஞர்களையும் தனது ரசிகர்களாக கொண்டு கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்த ரஜினி தான் ஒரு கன்னடர் என்பதை நிரூபித்துள்ளார்.

தனது திரைப்படத்தின் மூலம் இளைஞர்களுக்கு ஒரு நல்ல கருத்தையும் அவர் சொன்னதில்லை. வியாபாரரீதியாக திரைப்படத்தில் வாங்கும் சம்பளம் ரூ.20 கோடிக்கு நஷ்டம் வந்து விடுவோ என்று அவர் அச்சப்படுகிறார்.

உண்ணாவிரதத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக ஆவேசமாக கன்னட வெறியர்களுக்கு எதிராக பேசிய பேச்சுக்களை திரும்பப் பெற ரஜினிகாந்த் வாய் சொல்லில் வீரர் என்பதை நிரூபித்துள்ளார்.

எனவே அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். தான் சம்பாதித்த வியாபார தளமாக தமிழகத்தையும் தமிழக இளைஞர்களையும் பயன்படுத்திக் கொண்ட ரஜினிகாந்துக்கு இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

நன்றி: தட்ஸ்டாமில்.காம் வலைத்தளம்

Thursday, July 24, 2008

449. புராதானச் சென்னையின் கட்டுப்பாடற்ற பேருந்துப் பயணங்கள்!

ஜே.எஸ்.ராகவன் என்பவர் எழுதி, சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான இந்த "மலரும் நினைவுகள்" கட்டுரையை (இயன்றவரை நகைச்சுவைக்கு பங்கம் ஏற்படாதவாறு!) தமிழ்ப்படுத்தியிருக்கிறேன்.
********************
இரண்டாம் உலகப்போர் முடிவில், நிலக்கரிக்கு மாற்றாக பெட்ரோல் எரிபொருளாக பயன்படத் துவங்கிய காலத்தில், பூந்தமல்லிக்கும் பிராட்வேக்கும் இடையே, நெரிசல் இல்லாத சாலைகளில் பறந்த அந்த தனியார் பேருந்துகள் இன்னும் என் ஞாபகத்தில் உள்ளன. ஆங்கிலேயக் கொலையால் 'பூனமல்லே' என்று திரிந்த பூவிருந்தவல்லியைப் பற்றி பேசும்போது, அப்போது அங்கு அமோகமாக வளர்ந்த வெண்பனி நிற மல்லிப்பூவின் வாசம் (என்னையொத்த வயதானவர்களின்) நினைவில் வீசுவதை தவிர்க்க இயலாது!

அக்காலத்தில் பூந்தமல்லி டெர்மினஸில் பேருந்து புறப்படுவதை விசிலடித்து அறிவிக்க ஒரு நேரக் காப்பாளர் (Time Keeper) இருந்தார். ஆனால் ஓட்டுனரோ அவரது விசிலை கண்டு கொள்ளாமல், பேருந்தில் பயணிகள் ஓரளவு நிறைந்த பின்னர் தான் பேருந்தைத் துவக்குவது வழக்கம்! அப்பேருந்துகளின் நடத்துனர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்தனர்! சிலர் உருண்டையாகவும், சிலர் 'தொள தொளா' சட்டை / கால்சராயுடனும், இன்னும் சிலர் அழகாக நறுக்கப்பட்ட பென்சில் மீசையுடனும் பார்க்க காமெடியாக இருப்பர் :) அவர்களில் என்னைக் கவர்ந்தவர், வெண்மையான முகத்தில் இங்க் அடித்தது போல தெரியும் ஹிட்லர் மீசையுடன் காணப்பட்ட பழனி என்பவர்.

பெரும்பாலான பயணிகளுடன் பழனிக்கு நல்ல பழக்கம் இருந்ததால், அவர்கள் பட்டணம் செல்வது குறித்து ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவதை பழனி வழக்கமாகக் கொண்டிருந்தார். மவுண்ட் ரோடில் இருந்த ஹிக்கின்ஸ்பாதம் புத்தகக் கடைக்கு என்னுடன் பயணித்த எனது தந்தையாருக்கு, பழனியிடமிருந்து டிக்கெட் பெறுவதில் துளியும் தயக்கம் இருந்ததில்லை. காரணம்: நடத்துனர்களில் பழனி ஒருவர் தான் டிக்கெடைக் கிழிக்க விரலை எச்சில்படுத்துவதில்லை:)

செயிண்ட் தாமஸ் மவுண்டுக்கு அருகில் இருந்த பட் ரோடு நிறுத்தம் வந்தவுடன், நான் எனது கண்களையும், காதுகளையும் கூராக்கிக் கொள்வேன்! அக்காலத்தில், அவ்விடம் ஒரு குட்டி லண்டன் போல இருந்தது. வட்டமான தொப்பி அணிந்த ஆங்கிலேயக் கனவான்களுடன், கால்கள் தெரியும் விதத்தில் வண்ண வண்ண ஸ்கர்ட் அணிந்த வெள்ளை நிற பெண்மணிகள், அந்த நிறுத்ததிதில் தான் பேருந்தில் ஏறுவர்!

அந்த வெள்ளைக்கார ஜோடிகள் கை கோர்த்தபடி இருப்பர். இந்த கை கோர்த்தல், பொது இடத்தில் செய்யத்தகாத காரியமாக கல்யாணமான இந்தியர்கள் நினைத்த காலம் அது ! சில கனவான்களிடம் பீர் வாசனை அடிக்கும். வெள்ளைக்கார நங்கைகளோ வாசனை திரவிய தொழிற்சாலை போல கமகமவென்று வருவார்கள் !

பட்டணத்திலிருந்து பூந்தமல்லியை நோக்கி ஒரு இரவுப் பயணத்தின்போது, பார்க்க குளிரில் நடுங்கும் எலி போல காணப்பட்ட முனிசிபல் நீதிமன்ற பத்திர வியாபாரி என்னருகில் அமர்ந்திருந்தார். பேருந்து ஓடத் துவங்கியவுடன், அவரது தலை பக்கத்தில் இருப்பவர் தோளில் சாய்ந்து விடுவது என்பது பொதுவாக நடக்கும் விஷயம் தான், குறட்டையும் உண்டு :)

அக்கால பேருந்துகளில், இருவர் அமரக்கூடிய இருக்கைக்கு நேர் எதிரே இன்னும் இருவர் அமரும் விதமாக, இருக்கை அமைப்பு இருந்தது. எங்கள் இருக்கைக்கு எதிரே, கோட் சூட் அணிந்த ஓர் ஆங்கிலக் கனவானும், நீண்ட கால்கள் கொண்ட சிற்பம் போல இருந்த அவரது மனைவியும் அமர்ந்திருந்தனர். சாலையில் ஒரு மூதாட்டி முக்தி அடைவதை தடுக்கும் பொருட்டு, பேருந்து ஓட்டுனர் ஓர் அவசர பிரேக் அடித்ததில், என்னருகில் தூங்கிக் கொண்டிருந்த பத்திர வியாபாரி, வில்லிலிருந்து புறப்பட்ட அம்பைப் போல, அவ்வெள்ளைக்கார பெண்மணியின் தாராள மடியில் தஞ்சம் அடைந்தார் :)

நிலைமையை உணர்ந்த வியாபாரி, 'சாரி மேடம், சாரி மேடம்' என்பதை, ஏதோ ஒரு பிராயசித்த மந்திரத்தை ஜெபிப்பது போல் பல தடவை உச்சரித்தார்! "முதலில் எழுந்திரு மேன், அப்புறம் மன்னிப்பு கேளு" என்று கூறியபடி, அந்த ஆங்கிலேயப் பெண்மணி தனது மடியிலிருந்த வியாபாரியின் தலையை, ஒரு வீங்கிய பெருச்சாளியை அப்புறப்படுத்துவது போல, தனது இடது கையால் விலக்கித் தள்ளினார் ! பிறகு அப்பெண்மணி தனது ஸ்கர்ட்டை சரி செய்து கொண்டபோது, பழனி சிரிப்பை அடக்கிக் கொண்டு என்னைப் பார்த்து கண்ணடித்தார் :)

ஒரு மழைக்கால இரவில் கடைசிப்பேருந்தில் நானும் என் தந்தையாரும் பட்டணத்திலிருந்து பூந்தமல்லியில் உள்ள எங்கள் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தோம். தந்தையார் தூங்கி விட்டிருந்தார். 'பேருந்து நிறுத்தத்திலிருந்து வீட்டை அடைவதற்குள் ஹிக்கின்பாதம்ஸ் கடையில் வாங்கிய புத்தகங்கள் அத்தனையும் மழையில் நனைந்து விடுமே, என்ன செய்வது?' என்று நான் யோசித்துக் கொண்டிருந்தபோது, பேருந்து மெல்ல நின்றது. வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்தது! எனது தந்தையாரை எழுப்பிய பழனி, நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டதைத் தெரிவித்தார்.

சாலையில் என் பாதம் பட்டவுடன் தான் கவனித்தேன், எங்கள் வீட்டு வாசலிலேயே நாங்கள் இறக்கி விடப்பட்ட விஷயத்தை !!!

எ.அ.பாலா

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

Sunday, June 15, 2008

441. எனது கேள்விகளுக்கு ச.சங்கரின் சூப்பர் பதில்கள்... பெனாத்தலாருக்கு சங்கரின் கேள்விகள்

நண்பர் ச.சங்கர் நேற்று நான் இப்பதிவில் கேட்டிருந்த கேள்விகளுக்கு தனது இப்பதிவில் சுவாரசியமாக பதிலளித்திருக்கிறார். மேலும், 4 கேள்விகள் பெனாத்தல் சுரேஷைக் கேட்டு அவரிடம் வம்பு 'வளிக்க' முயற்சி செய்துள்ளார் :)

அவரது வலைப்பதிவில் தமிழ்மணம் கருவிப்பட்டை வேலை செய்யாததால், பதிவை தமிழ்மணத்தில் இணைக்க இயலவில்லை என்று கூறியதால், கேள்வி-பதிலை இங்கே மறுபிரசுரம் செய்திருக்கிறேன். Over to ச.சங்கர் !

எ.அ.பாலா
**************************
பதில்கள் to எ அ பாலா மற்றும் கேள்விகள் to பினாத்தல் சுரேஷ்

பாலா ,
நன்றி மற்றும் கண்டனங்கள். நன்றி என்னை கூப்பிட்டதற்கு . கண்டனங்கள் 4 கேள்விகள் என்ற விதியை!? மீறி உப கேள்விகளுடன் 8 கேள்விகள் கேட்டதற்கு. இப்போது பதில்கள்.

என்றென்றும் அன்புடன் பாலா என்னை இந்தப்பதிவில் கேட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும் கீழே.

1. சமீபத்தில் நீ மேற்கொண்ட தாய்லாந்து விசிட்டின்போது நடந்த சுவாரசியமான நிகழ்வு பற்றிக் கூற முடியுமா ? "களியாட்டங்கள்" பற்றி விவரமாகக் கூறினால், தன்யனாவேன் :)

பாங்காங்கில் ஒருநாள் மாலை சுமார் 8 மணியளவில் ஆள் நடமாட்டம் குறைந்த ஒரு சாலையில் போய்க்கொண்டிருந்த போது 2 தாய்லாந்து இளைஞர்கள் இரண்டு அழகான தாய்லாந்து இளம் பெண்களை பலவந்தப்படுத்த முயன்று கொண்டிருக்கும் போது, நான் ஓடிப் போய் அடிதடியில் இறங்கி அந்த இருவரையும் காப்பாற்ற , அந்த இளம் பெண்கள் நன்றியுடன் என்னைக் கட்டிப் பிடித்து உதட்டில்.................என்று சுவாரஸ்யமாக கதை விட ஆசைதான். ...........ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லாமல் ஒரு டூரிஸ்டுக்கே உரித்தான பரபரப்பான ஷெட்யூலுடன் சுற்றிப்பார்த்தல், ஷாப்பிங் தவிர வேறு எந்த சுவாரசியமும் இல்லாமல் ஒரு வாரம் போனது என்பதுதான் உண்மை :)
என்னக் கவர்ந்த நிறைய விஷயங்களில் குறிப்பாக இரண்டு..பத்தாயா (pattaya)வில் பார்த்த "அல்கஸார்" என்ற காபரே நடனமும் , இரவு இரண்டு மணிக்கு வாக்கிங் ஸ்ட்ரீட்டில் ஜாலியாக நடந்து போனதும்.

இந்த அல்கஸார் என்பது ஒரு வகையான குழு காபரே நடனம். குடும்பத்துடன் பார்க்கலாம்( நானும் 8 வயது பையன் உட்பட குடும்பத்துடந்தான் போனேன்)1 மணி நேர நிகழ்ச்சியில் கண் முன்னேயூ சர் சர் என்று மாறும் தத்ரூப செட்களும், அதன் பிரும்மாண்டமும், இசைக்கேற்ப நடனமாடும் அழகிகளும், ஐரோப்பிய, சீன , இந்திய( ஒரு ஹிந்தி பாட்டுக்கு ஆடினாங்க..பேக்ரவுண்ட் செட்டிங் சொல்லணுமா?!! தாஜ்மஹால்தான்) , தாய்லாந்து , அரேபிய என அனைத்து கலாச்சாரங்களையும் வெளிப்படுத்தும் நடனங்கள் உண்மையிலேயே உலகத்தரம்.அதுவும் ஒருவர் அர்த்தநாரீஸ்வரர் போல ஒரு பாதி ஆண் உடையுடனும் மறு பாதி பெண் உடையுடனும் நடனமாடி ஆண்பெண் போல ஒரே நேரத்தில் அங்க அசைவு நளினம் காட்டியது ஹை லைட். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக நடக்கும் இந்த நிகழ்ச்சி ஒரு மெயின் டூரிஸ்ட் அட்ராக்க்ஷன். காட்சி முடிவில் நடனம் புரிந்தோருடன் போட்டோவும் எடுத்துக் கொள்ளலாம்(தனியாக காசு கட்ட வேண்டும்) . நிகழ்ச்சி முடிந்து பஸ்ஸில் செல்லும் போது எங்கள் கைடு ஆடிய அழகிகள் அனைவருமே " பெண்களாக மாறிய ஆண்கள் " என்று சொல்லி எங்களை பிரமிப்பின் உச்சிக்கே கொண்டு சென்றார். சில படங்கள் கீழே.




























அடுத்தது இரவு ஏழு மணி வரை மிகத் திராபையாக தூங்கி வழியும் "வாக்கிங் ஸ்ட்ரீட்" (தெரு பேரே அதனுங்கோ) அத்ற்கு மேல் புது மணப் பெண் கோலம் பூண்டு பார்கள், டிஸ்கோ ,மசாஜ் , மாஜிக் மற்றும் கடைகளில் அனைத்து கதவுகளிலும் விலை மாதர்கள் என அதிகாலை 2 மணி வரை உருமாறும் அதிசயம் நேரில் பார்த்தால்தான் நம்ப முடியும். இவ்வளவு இருந்தும் இங்கு எந்த ஒரு விரசமோ அல்லது அசம்பாவிதமும் இல்லாமல் மக்கள் குடும்பத்துடனோ இல்லை தனியாகவோ திருவிழா போல நடந்து செல்வது அதுவும் பெண்கள் தனியாக நடந்து செல்வது பார்த்தாலும் நம்புவது கடினம்,


















2. ஒரு கால கட்டத்தில் கம்யூனிஸ சித்தாந்தத்தில் (அது குறித்து நிறைய பேசியிருக்கிறீர்கள் கூட!) நம்பிக்கை வைத்திருந்த நீ, எப்போது ஏன் மாறினாய் ? நலிந்தவர் நலனில் அக்கறை இருப்பது போல் நடிக்கும் சந்தர்ப்பவாத இந்திய (போலி) கம்யூனிஸ்ட்களைப் பற்றி உன் கருத்துகள் யாவை ?

முதலமைச்சர் கருணாநிதியின் பாணியில் சொல்வதானால் " இன்னும் நானும் ஒரு கம்யூனிஸ்டுதான் " இப்போது அவர் மாதிரியே என் கம்யூனில் "என் குடும்பம் " மட்டுமே உள்ளது.இது நடுத்தர வர்கத்திற்குள் நடக்கும் ஒரு விஷயம்தான்.மேன்சனில் வசிக்கும் புதிதாக வேலைக்கு வந்த கொஞ்சமேனும் சமூக சிந்தனையுள்ள இளைஞர்கள் கம்யூனிச தாக்கம் இல்லாமல் இளமைப் பருவத்தை கடப்பது மிக அரிது. அப்படிப்பட்ட 10000 பேரில் 1 அல்லது 2 பேர்தான் கடைசிவரை அதே பாதையில் பயணிக்க முடிவதும் கண்கூடு.மற்றவரெல்லாம் சமூக நிர்பந்தம் மற்றும் சுற்றுப் புற சூழ்நிலைகளால் மாறி விடுகின்றனர். என்னை எந்த ஒரு தனி நிகழ்வும் மாற்றவில்லை.படிப்படியாக தாக்கம் குறைந்து விட்டது என்பதே உண்மை.

இந்தியாவைப் பொறுத்தவரை வெவ்வேறு கம்யூனிச குழுக்கள் (சிபிஐ,சிபிஎம்,மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் et all) கம்யூனிச சமுதாயம் நோக்கிய அவர்கள் பாதை என்ன என்று இன்னும் முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார்கள் என்றே சொல்லவேண்டும். அதுவும் ஓட்டு அரசியலில்(Electoral politics) இருக்கும் சிபிஐ , சிபிஎம் போன்ற கட்சிகளின் கூத்து உச்சகட்டம். 80களில் முதல் எதிரி "நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ " காங்கிரஸ் கட்சி என்றும் அப்படிப்பட்ட கட்சியுடன் எந்தக் கூட்டும் இல்லை என்று சொன்னார்கள். ஆனால் இன்று முதல் எதிரி மதவாத பாஜக . அதனை எதிர்க்க காங்கிரசுடன் கூட்டு என்று நிலைபாடு. பாஜகவின் இந்த அசுர வளர்ச்சிக்கு (1980 முதல் 2000 வரை) இவர்களே (இவர்களது அந்தக் காலத்தைய கண் மூடித்தனமான காங்கிரஸ் எதிர்ப்பே) முக்கிய காரணம் என்றே நான் நினைக்கிறேன். இவர்களது முக்கியமான பிற்போக்குத்தனமே "தங்களது தவறுகளை இவர்கள் ஒரு போதும் ஒத்துக் கொண்டதே இல்லை " மற்றவர்களைவிட (atleast on record) அதிகம் படிப்பதால் தனக்கு எல்லாம் தெரியும் என்ற ஒரு மனோபாவமும் வந்துவிடுகிறது. "எல்லாம் தெரிந்துவிட்டால் எழுதும் பாட்டில் பிழை இருக்காது என்று அர்த்தமோ ?" என்று நக்கீரன் பாணியில் கேட்கத் தோன்றுகிறது. மற்ற படி இவர்களை " போலிகள் " என்று எல்லாவிஷயத்திலும் ஒட்டு மொத்தமாக சொல்வது கொஞ்சம் அதிகப் படிதான் :)

3. ஆணாதிக்கவாதிகள் போல் பெண்ணாதிக்கவாதிகளும் இருக்கிறார்கள் தானே ! அவர்களை எப்படி அடையாளம் காண்பது ? அவர்கள் குணாதிசயங்கள் யாவை ?

இருக்கிறார்கள் . இன்னும் சொல்லப் போனால் ஆண் பெண் உறவில் சமநிலை என்று எதுவும் இல்லை. ஒன்று பெண் அடங்கி இருக்கிறாள் அல்லது ஆண். இரண்டும் இல்லாதது பெரும்பாலும் விவாகரத்தில் அல்லது விவகாரத்தில் போய் முடிகிறது. பெண்ணாதிக்கவாதிகளை (சொந்த / மற்றவர்) அனுபவத்தில் கண்டு கொள்ள வேண்டியதுதான். பெண்ணாதிக்கவாதிகளின் குணாதிசயங்கள் கிட்டத்தட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போன்று இருக்கும் ( give or take some percentage)

4. நாம் மும்பையில் இருந்த காலகட்டத்தில், நண்பர்கள் நாங்கள் தாராவிக்கு விசிட் அடிக்கும்போது, எங்கள் அழைப்பை நீ ஒரு தடவை கூட ஏற்றதில்லை ! என்ன காரணம் என்று இப்போதாவது கூறலாமே ?

தாராவிக்கு நீங்கபோகும் போதெல்லாம் fixed agenda இல்லாமல் போனது முதல் காரணம். பயம் இரண்டாவது ள் காரணம் Adventurist மனோபாவம் எனக்கு இயல்பிலேயே குறைவு என்று நினைக்கிறேன் :) . அது சரி .. இது சபையில் கேட்கவேண்டிய கேள்வியா ?

ஒரு வழியாக 4 கேள்விகளுக்கும் பதிலளித்து விட்டேன். நான் 4 கேள்விகள் கேட்க வேண்டும் என்றதும் நினைவுக்கு வந்தவர் பினாத்தல் சுரேஷ் அவருக்கான நாலு கேள்விகள்.

1. வலைப்பதிவு ஆரம்பித்த கொஞ்ச நாட்களில் திடீரென்று நான் இனிமேல் எழுதப் போவதில்லை என்று வெகுண்டு எழுந்தீர்களே இப்போது "சீனியர் வலிப்பதிவர்களில் ஒருவராக"!??? உங்கள் மனநிலை என்ன ?

2.முதல் காதல் அனுபவம் ( ஒரு தலையாக இருந்தாலும்) எங்கு, எப்போது & கடைசியில் என்ன ஆச்சு?

3.மனைவிக்கு முதல் குழந்தை பிறந்த போது எங்கிருந்தீர்கள்(டெலிவரி வார்ட் முன்பாக நகத்தை கடித்துக் கொண்டா?)? அப்போது மனதில் தோன்றிய எண்ணங்கள் ?

4.பணவீக்கம், விலை வாசி உயர்வு,கச்சா எண்ணை விலை உயர்வு இப்படி ஏகப்பட்ட பிரச்சினை இருக்கும் இந்த தருணத்தில் உங்களை முதல்வன் பட ஸ்டைலில் ஒரு நாள் பிரதமராக (இந்தியாவிற்கு) ஆக்கினால் நீங்கள் எடுக்கும் ஐந்து முதன்மை முடிவுகள் என்னவாக இருக்கும் ?


டிஸ்கி : மேலே கொடுக்கப்பட்ட படங்கள் அனைத்தும் நானே நேரடியாக சுட்டது.( அட இணையத்தில் இருந்து இல்லைங்க. என் காமராவின் வழியாக.) அதனால் போட்டோ நன்றாக இருந்தால் நான் பொருப்பல்ல.

அன்புடன்...ச.சங்கர்

*****************

Saturday, June 14, 2008

டோ ண்டு சார் கேள்விகளுக்கு உடனடி பதில்கள், ச.சங்கருக்கு 4 கேள்விகள்!

டோண்டு ராகவன் அவர்கள், அவரது இந்தப் பதிவில் என்னிடம் கேட்டிருந்த கேள்விகளுக்கு எனது பதில்கள் கீழே. இந்த "4 கேள்விகள்" சமாச்சாரம், சங்கிலித் தொடர் போல தொடர வேண்டும் என்று டோ ண்டு சார் சொல்லியிருப்பதால், நான் இப்பதிவின் முடிவில் கேட்டிருக்கும் நான்கு கேள்விகளுக்கு நண்பர் ச.சங்கரை (ஒரு பதிவிட்டு) பதிலளிக்குமாறு அழைக்கிறேன்.

1. சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம், இந்த டோ ண்டு ராகவன் தான் வலைப்பூவுக்கு வந்ததே உங்களால்தான் என்று கூவிக் கூவி வருவதை நினைத்து உங்கள் ரியேக்ஷன்கள் என்ன?

கொஞ்சம் தர்மசங்கடமாக இருந்தாலும், உங்களைப் போன்ற வலையுலக தாதாவுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது பற்றி சற்று பெருமையே என்பது தான் நிஜம் !!! இளையவர் முதல் பெரியவர் வரை உங்கள் பாப்புலாரிட்டி கொடி கட்டிப் பறப்பது குறித்து கொஞ்சம் பொறாமையும் கூடத் தான் :) சற்று சீரியஸாக, நல்ல வாசிப்பனுபவம் மிக்க, பொதுவாக அனைவரிடமும் நட்பு பாராட்டும் குணம் உடைய, பல மொழிகளில் புலமை மிக்க, சலிப்பில்லாமல் உழைக்கும் உங்களை தமிழ் வலையுலகுக்கு அழைத்து வந்ததில் மகிழ்ச்சியே ! வலையுலகு களை கட்டுவது உங்களைப் போன்றவர்களால் தான் என்பதை ஒப்புக் கொள்வதில் எனக்குத் தயக்கம் இல்லை !

2. ஸ்கூலில் இம்மாதிரி வாத்தியார்களுக்கெல்லாம் செல்லப் பிள்ளையாக இருந்திருக்கிறீர்கள் (உதாரணம் டி ராமானுஜம் அவர்கள்). இதனால் மற்றப் பசங்களின் பொறாமை மற்றும் எரிச்சல் அதிகமாக இருந்திருக்குமே, இதை எப்படி சமாளித்தீர்கள்?

பலத்த போட்டி இருந்தது. பொறாமை இல்லை அல்லது சில நண்பர்கள் வெளியில் சொல்லாமல் இருந்திருக்கலாம். முக்கியமாக, எனது பள்ளித் தோழர்களுக்கு எனது ஏழ்மை நிலை தெரிந்திருந்ததால், என் மீது வாஞ்சை இருந்தது, அதனால் நான் நன்றாக படித்தது குறித்து அவர்களுக்கு பொறாமை கிடையாது என்பது என் எண்ணம்.

ஓரு முறை ஆங்கிலப்பாட ஆசிரியர் திரு D.ராமானுஜம், கட்டுரைப் புத்தகம் எடுத்து வராத மாணவர்களை வகுப்பை விட்டு வெளியே செல்லுமாறு பணித்த மறு நிமிடம், அம்மாணவர்களில் நானும் ஒருவன் என்பதைப் பார்த்தவுடன், உத்தரவை திரும்பப் பெற்றுக் கொண்டு அனைவரையும் அமரச் சொன்ன நிகழ்வை நீங்கள் சுட்டுகிறீர்கள் அல்லவா ? இப்படி ராமானுஜம் போன்ற ஆசிரியர்கள் சில சமயங்களில் அடித்த கூத்தினால், சிலருக்கு சற்று எரிச்சல் ஏற்பட்டிருக்கலாம் :) பள்ளி நாட்கள் (ஏழ்மையிலும்) மிக இனிமையாகவே கழிந்தன.
வாசிக்க:
http://balaji_ammu.blogspot.com/2004/10/iv_26.html
http://balaji_ammu.blogspot.com/2005/01/6.html
http://balaji_ammu.blogspot.com/2005/01/7.html


3. சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியா இங்கிலாந்து (என்று நினைக்கிறேன்) கிரிக்கெட் டெஸ்ட் மேட்சில் இந்தியா ஃபால்லோ ஆன் வாங்கி, மேலே ஆடி மேட்சையும் ஜெயித்ததே. இதற்கு முன்னால் இரு முறை அவ்வாறு நடந்ததாகக் கேள்வி. அவற்றின் விவரங்கள் தர இயலுமா?

நீங்கள் குறிப்பிடுவது இந்தியா vs ஆஸ்திரேலியா என்று நினைக்கிறேன். 2001-இல் நடந்தது. இந்தியா ஃபால்லோ ஆன் வாங்கி, பின்னர் லஷ்மணும் (281), டிராவிட்டும்(180) ஜோடி சேர்ந்து ஒரு கலக்கு கலக்கியதில், கல்கத்தாவில் ஸ்டீவ் வா தலைமை தாங்கிய ஆஸ்திரேலிய அணி மண்ணைக் கவ்வியது. அவர்களது தொடர் (16 போட்டிகள்) வெற்றியும் முடிவுக்கு வந்தது. அவர்களது 'Invincibility' ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

1981-இல் ஹெடிங்க்லியில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா ஆட்டம் ஒரு Real Classic. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 401 ரன்கள் எடுத்தது. மைக் பிரயர்லி (இவரை தலைமைப் பண்பு, ஸ்லிப் ஃபீல்டிங் ஆகியவற்றிற்காகவே அணியில் வைத்திருந்தனர் என்றால் அது மிகையில்லை!) தலைமை தாங்கிய இங்கிலாந்து அணி 174 ரன்கள் எடுத்து follow-on வழங்கப்பட்டு, இரண்டாவது இன்னிங்க்ஸிலும் 135-7 என்ற மிக இக்கட்டான நிலையில் இருந்தபோது, இயன் பாத்தம், வால் முடிவாட்டக்காரர்களோடு (Tailenders:)) கூட்டு சேர்ந்து ஒரு காட்டு காட்டியதில், இங்கிலாந்து 356 ரன்கள் குவித்து (பாத்தம் 149 நாட் அவுட்) ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்காக 130 ரன்களை நிர்ணயித்தது. பின்னர், ஆஸ்திரேலிய அணி பாப் வில்லிஸின் (8-43) வேகப்பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல், 111-க்கு (இதை நெல்சன் என்று அழைப்பர்! அதாவது, அதிர்ஷ்டமில்லா எண்!) சுருண்டு, 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது வரலாறு !

இதற்கு முன்னர், 1894-85 Ashes-இல், ஸிட்னியில் நடந்த ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 586 ரன்கள் குவித்த பிறகு, இங்கிலாந்து 325 ரன்கள் எடுத்தது. Follow-on செய்ய அழைக்கப்பட்ட இங்கிலாந்து, திடமாக ஆடி, 437 ரன்கள் எடுத்த நிலையிலும், ஆஸ்திரேலியாவின் வெற்றி இலக்கு 177 ரன்களே ! நான்காவது நாள் முடிவில், ஆஸ்திரேலியா 113-2 என்ற ஸ்கோரில் Driver's seatஇல் இருந்ததென்னவோ நிஜம் ! இரவு பெய்த மழையின் காரணமாக, இறுதி நாளில் பிட்ச் சுழற்பந்து வீச்சுக்கு பயங்கரமாக உதவியதில், ஆஸ்திரேலியாவின் ஆட்டம் க்ளோஸ் :) 166 ரன்களில் சுருண்டு, இங்கிலாந்து 10 ரன்களில் வென்று ஒரு Famous Victory !!! தொடரையும் 3-2 என்ற கணக்கில், இங்கிலாந்து வென்றது.

4. மனைவி/மகள்களின் பிறந்த நாளை மறந்து அசடு வழிந்தது உண்டா?

மகள்களின் பிறந்த நாளை நிச்சயம் மறப்பதற்கு வாய்ப்பே இல்லை !!! மனைவியிடம் (வேலைப்பளு காரணமாக) ஓரிரு முறை நிகழ்ந்துள்ளது. ஒரு சமயம், மனைவியின் பிறந்த நாளுக்கு வேண்டி (ஒரு வாரத்திற்கு முன்னதாகவே) ஒரு பரிசு வாங்கி வைத்து விட்டு, அதை பிறந்த நாளில் கொடுக்க மறந்து, திடீரென்று ஞாபகம் வந்து, அவரை அன்றிரவு ஒரு மணிக்கு தூக்கத்திலிருந்து எழுப்பி, வாழ்த்து சொல்லிக் கொடுத்தது, அசடு வழிவதில் சேருமா என்று டோ ண்டு சார் தான் கூற வேண்டும் :)

ச.சங்கருக்கு 4 (சற்று ஏடாகூடமான) கேள்விகள்:

1. சமீபத்தில் நீ மேற்கொண்ட தாய்லாந்து விசிட்டின்போது நடந்த சுவாரசியமான நிகழ்வு பற்றிக் கூற முடியுமா ? "களியாட்டங்கள்" பற்றி விவரமாகக் கூறினால், தன்யனாவேன் :)

2. ஒரு கால கட்டத்தில் கம்யூனிஸ சித்தாந்தத்தில் (அது குறித்து நிறைய பேசியிருக்கிறீர்கள் கூட!) நம்பிக்கை வைத்திருந்த நீ, எப்போது ஏன் மாறினாய் ? நலிந்தவர் நலனில் அக்கறை இருப்பது போல் நடிக்கும் சந்தர்ப்பவாத இந்திய (போலி) கம்யூனிஸ்ட்களைப் பற்றி உன் கருத்துகள் யாவை ?

3. ஆணாதிக்கவாதிகள் போல் பெண்ணாதிக்கவாதிகளும் இருக்கிறார்கள் தானே ! அவர்களை எப்படி அடையாளம் காண்பது ? அவர்கள் குணாதிசயங்கள் யாவை ?

4. நாம் மும்பையில் இருந்த காலகட்டத்தில், நண்பர்கள் நாங்கள் தாராவிக்கு விசிட் அடிக்கும்போது, எங்கள் அழைப்பை நீ ஒரு தடவை கூட ஏற்றதில்லை ! என்ன காரணம் என்று இப்போதாவது கூறலாமே ?

என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, January 04, 2008

407. கோயில் உண்டியலில் காசு போடுங்கள் !

கண்ணபிரான்,
உங்களின் இந்தப் பதிவு குறித்து எனது சில கருத்துகள்:

முதலில், பரபரப்பான தலைப்புக்கு பாராட்டுக்கள், தேறி விட்டீர்கள் :)

1. //திருக்கோவில்கள் திருந்த வேண்டுமா? அப்படின்னா, இனி மேல் கோவில் உண்டியலில் காசு போடாதீங்க!
//

உண்டியலில் காசு போடாதே என்று சொல்வது சரியாகாது. இருக்கிறவங்க போடட்டுமே, அதில் ஒரு பங்காவது கோயில் நற்பணிகளுக்கும், பக்தர்களுக்கும் திரும்பித் தான் வருகிறது என்பது உண்மையே! தட்டில் காசு போட வேண்டாம் என்று கூறுவதும் தவறே, ஏனெனில் பல அர்ச்சகர்கள் கஷ்ட ஜீவனம் தான் நடத்துகிறார்கள், சிலபல பெருமை வாய்ந்த கோயில்கள் தவிர்த்து !

2. அது போல, செல்வனின் பின்னூட்டக் கருத்தான அரசு நிர்வாகத்தால் தான் கோயில்களில் பிரச்சினை என்பதும் ஏற்புடையதல்ல. ஆனால், செல்வனின் பிற கருத்துகள் 'நச்' ! எனக்குத் தெரிஞ்சு, பார்த்தசாரதி கோவிலில் 'அலம்பல்' பண்றவங்க, பரம்பரையா பாத்யதை உள்ளவங்களும், கோஷ்டியில வர்றவங்களும், மடப்பள்ளி ஆட்களும் தான் !!! எல்லா விசேஷ தினங்களிலும், அவங்க ஆதிக்கம் தான் :( யாராவது விஐபி வந்தா, கோயில் ஆட்கள், அவங்க மேலே விழுந்து கவனிக்கறதும் நாம் பார்க்கிறது தானே !

ஒரு முறை RM வீரப்பன் பார்த்தசாரதி கோயிலுக்கு வந்திருந்தபோது, 20-25 பேர் தரிசனம் செய்யக்கூடிய அழகிய சிங்கர் சன்னதியில், பொது மக்கள் யாரையும் உள்ளே விடாமல் கோயில் அலுவலர்கள், அவரை மட்டும் தனியாக தரிசனம் செய்ய வைத்ததை நான் பார்த்திருக்கிறேன், அவர் அதை விரும்பாதபோதும் ! அரசியல்வாதிகளையும், சினிமாக்காரர்களையும், சாமியார்களையும் எப்படியாவது குஷிப்படுத்த வேண்டும் என்ற அதீத ஆர்வக் கோளாறு நம்மிடம் விரவியிருப்பதே இதற்கு முக்கியக் காரணம் :(

3. செல்வனின் இன்னொரு கருத்தான "ஏழைகளுக்கு உதவுவதில் ஆன்மிக உணர்வு நிரம்பியவர்கள் தான் முண்ணனியில் இருப்பார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து" என்பதில் சாரம் இருப்பதாகத் தோன்றவில்லை. இதை அனுபவபூர்வமாகச் சொல்கிறேன். இறை நம்பிக்கைக்கும், மனித நேயத்திற்கும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை !!!

4. எல்லா இடத்துலேயேயும், 'வகுப்புகள்' இருக்கிற மாதிரி, கோயில் தரிசன முறையிலும் இருக்கு, அதை 'avoid' பண்ண முடியாது, மாத்தறதும் ரொம்ப கஷ்டம். ஸ்பெஷல் டிக்கட் விலையை நல்லா உயர்த்தி வச்சு, இருக்கிறவங்க கிட்டேயிருந்து வாங்கறது ஒரு தப்புமில்ல, அரசியல் விஐபிகள் தான், ஒரு பைசா செலவில்லாம, அதிகாரத்த வச்சு, பண்ண பாவத்துக்கு ஓசியிலேயே கோயிலில் பரிகாரம் தேடறவங்க என்பதும் நிதர்சனமே !!! தொழிலதிபர் விஐபிக்கள் வாயிலாக கோயிலுக்கு பொருள் ஆதாயம் உள்ளதால், அவர்களுக்கு ஸ்பெஷல் தரிசனம் அனுமதிக்கப்படுவதில் தவறில்லை.

5. //கூட்டமாக இருக்கு! டைம் ஆகும்! ரொம்ப பிசி என்று நினைக்கிறீர்களா?
அப்படின்னா கோயிலுக்குப் போகவே வேண்டாம்!
காலத்தைக் கடந்தவனைக் காணக் கூட உங்களுக்குக் காலம் இல்லை எனில், அப்படி ஏன் போக வேண்டும்? இல்லத்தில் இருந்தே, குடும்பமாக வழிபடலாமே?
//

இதெல்லாம், கேட்கறதுக்கு வேணா நல்லா இருக்கும், கடைபிடிக்கறது ரொம்ப கஷ்டம் ! "எங்கும் இறைவனைக் காண்பதற்கு" நாமெல்லாம் ஆழ்வார்/நாயன்மாரா என்ன ???

6. //* ஆழ்வார்களும் நாயன்மார்களும் அருணகிரியும் எத்தனை சல்லிக்காசு உண்டியலில் போட்டார்கள்?
** பணம் போடுவதால் பாவங்கள் கரைவதில்லை!
*** இறைவனைப் பணம் கொண்டு வசியப்படுத்த முடியவே முடியாது!!!
//

ஆழ்வார்/ நாயன்மாரிடம் காசு இருக்கவில்லை என்பது தான் நிஜம் ! அது போலவே, பெரும்பாலான மக்கள் காசு போடுவதால், பாப விமோசனம் கிட்டாது என்பதையும் உணர்ந்தே இருக்கிறார்கள் என்பது என் தாழ்மையான எண்ணம். சாதாரண மக்கள், மன அமைதிக்காகவும், ரொம்பவும் கஷ்டமில்லாத ஜீவனத்தை வேண்டியுமே, இறைவன் இல்லத்திற்குச் செல்கிறார்கள்.

7. //முடிந்த வரை புதுப்புது ஆலய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
இருக்கும் பல கோயில்களை நல்ல முறையில் பராமரிக்க உதவுங்கள்!
//

புதுசா ஆலயங்கள் வேண்டாம்னு நீங்க சொல்ற கருத்தோட எனக்கு உடன்பாடே, இருக்கிற கோயிலகளில் பல பராமரிப்பு அற்று, சிதிலமான நிலையில், நித்ய ஆராதனைக்குக் கூட காசு இல்லாமல் உள்ளன என்பது கண்கூடு. எனக்குத் தெரிஞ்சு, ஒரு 35 பழமையான வைணவ திவ்ய தேசங்கள் கவனிப்பார் அற்று, மோசமான நிலையில் உள்ளன. அவைகளில் சில:
திருமெய்யம் சத்யமூர்த்திப் பெருமாள் கோயில்
திருக்கூடலூர்
திருக்கபிஸ்தலம்
திருஆதனூர்
புல்லம்பூதங்குடி
நாதன் கோயில்
திருக்கண்டியூர்'
திருக்கண்ணங்குடி
தலைச்சங்காடு, கேரளா
திருநாங்கூர் கோயில்கள் (11)
திருக்குரயலூர் (திருமங்கையாழ்வார் அவதாரத் தலம்)
திருவாலி & திருநகரி

அது போலவே, கோயிலுக்குப் போடும் பணத்தை, தர்ம காரியங்களுக்கு செலவிடலாம். இறைத் தொண்டை விட அடியவர் தொண்டு சிறந்தது அல்லவா ?

8. உங்கள் தமிழ் அர்ச்சனை குறித்த கருத்து பற்றி ஏதாவது சொன்னால் அரசியலாகி விடும் ;-) இறைவனுக்கு மொழி கிடையாது. அவரவர்க்கு எது விருப்பமோ, அதன்படி அவனைப் போற்றி வழிபடலாம், அம்புடுதேன் :)

9. தங்களது இன்னபிற நல்ல கருத்துக்களோடு முழுதும் உடன்படுகிறேன்.

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, December 09, 2007

Star26. அனைவருக்கும் 'நட்சத்திர' நன்றி + ஒரு வாக்கெடுப்பு

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

எனது நட்சத்திர வாரம் நிறைவடையும் தருணம் வந்து விட்டது ! என் இந்த வார இடுகைகளை வாசித்து பின்னூட்டம் இட்ட /இடாத அனைவருக்கும் நன்றி. வாசிக்காதவர்களும் பெரிதாக ஒன்றும் இழந்து விடவில்லை :)

என்னை நட்சத்திர வாரப் பதிவராக இருக்குமாறு அழைத்தபோது, நான் ஒரு 'பழைய' பதிவராக ஆகி விட்ட நிலையில், அழைப்பை ஒப்புக் கொள்ள ஒரு தயக்கம் இருந்ததென்னவோ நிஜம், புதிதாக தமிழில் வலை பதிய வந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு தரப்படுவது தான் சரியாக இருக்கும் என்று ஓர் எண்ணம் இருந்ததால்! ஆனால், தமிழ்மணம் நட்சத்திர நிர்வாகி என்னை ஒப்புக் கொள்ள வைத்து விட்டார். என் பணி நிலைமையை கருத்தில் கொண்டு, என் நட்சத்திர வாரத்தை சற்று தள்ளி வைக்கவும் ஒப்பிய அவருக்கு என் நன்றி!

எனது வலைப்பதிவு கவுண்டரின் இவ்வார ஓட்டம் திருப்திகரமாகவே இருந்தது :)
ப்ளாக் கவுண்டர் எண்ணிக்கை அதிகரிப்பு: 4970
அதாவது, இவ்வாரம் என் வலைப்பதிவு, ஒவ்வொரு மணி நேரத்திற்கும், கிட்டத்தட்ட 30 தடவை திறக்கப்பட்டுள்ளது! வாசகர்கள் மற்றும் தமிழ்மணம் தயவால் !

நட்சதிர வாரப் பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்கள்: 254
வாசகர்களுக்கு நன்றி. என்னை நட்சத்திரமாக்கிய தமிழ்மணத்திற்கு நன்றி.
இந்த நட்சத்திர வாரத்தில், சில குறிப்பிட்ட பதிவுகளுக்கு, 'கருத்து கூறுவார்கள்' என்று நான் எதிர்பார்த்த சில பதிவர்கள் வராமல் என்னை ஏமாற்றி (!) விட்டாலும், பல புதிய வாசகர்களை, இந்த நட்சத்திர வாரம் எனக்கு பெற்றுத் தந்துள்ளது!

பலதரப்பு வாசகருக்கும் ஏற்றாற் போல், (அரசியல், சமூகம், ஆன்மிகம், கிரிக்கெட், பல்லவியும் சரணமும், சிறுகதை, சினிமா, தொழில்நுட்பம், அறிவியல், நகைச்சுவை, வலைச்சூழல் என்று) பல சப்ஜெக்ட்களில் என் நட்சத்திர வாரப் பதிவுகள் இருக்குமாறு பார்த்துக் கொண்டேன் என்று நம்புகிறேன்! (நீங்கள் தான் சொல்ல வேண்டும்!)

அது போலவே கி.அ.அ.அனானி பதிவுகளை தவிர்த்து விட்டேன் ;-)

கொஞ்சம் சுய தம்பட்டம்!

தமிழ்மண நட்சத்திர வரலாற்றில் முதன்முறையாக (சன் டிவியில் வரும் "இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக" போல் வாசிக்கவும்:)) எனது நட்சத்திர வாரத்தில் 26 புத்தம் புதிய பதிவுகளை (இப்பதிவையும் சேர்த்து, மீள்பதிவுகளையும் சேர்த்தால் 33!) இட்டு ஓர் அரிய பெரிய சாதனையை ஏற்படுத்தியுள்ளேன் :)

உங்கள் ஊக்கமும் இதற்கு ஒரு காரணம் !


Please Vote!
பாலாவின் நட்சத்திர வாரம் எப்படியிருந்தது ?

தேறவில்லை
பரவாயில்லை
நன்று
சிறப்பு


இந்த நட்சத்திர வாரத்திற்காக அதிகம் உழைத்து விட்டதால், ஒரு 'பிரேக்' முடிந்து பின்னர் சந்திப்போம்! விடை பெறுகிறேன்.

வாக்குப் பெட்டியில் உங்கள் வாக்கை பதிவு செய்து விட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்!

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails